games

img

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி: இன்று சென்னை – ஒடிசா அணிகள் மோதல்  

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் இன்று சென்னை – ஒடிசா அணிகள் மோதுகின்றன.  

எட்டாவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்) கோவாவில் உள்ள 3 மைதானங்களில் நடைபெற்று வருகிறது. மேலும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் ரசிகர்கள் இன்றி, இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும். இந்த போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.    

இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை – ஒடிசா அணிகள் மோதுகின்றன. இதுவரை 5 போட்டிகளில விளையாடிய சென்னை அணி 2 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வி என்ற புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. மேலும் 5 போட்டிகளில் விளையாடி ஒடிசா 3 வெற்றி, 2 தோல்வி என்ற புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

;