சர்வதேச கால்பந்து விளையாட்டு போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 800 கோல்கள் அடித்து புதிய சாதனையை படைத்துள்ளார்.
போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, கால்பந்து விளையாட்டில் பல சாதனைகளை படைத்துள்ளார். தற்போது போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டனாகவும், மான்செஸ்டர் யுனைடட் அணியின் முன்னணி வீரராகவும் உள்ள ரொனால்டோ, 800 கோல்களை அடித்து சாதனையை படைத்துள்ளார். லண்டனில் நடைபெற்ற பிரீமியர் லீக் போட்டி ஒன்றில் மான்செஸ்டர் யுனைடட் அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஆர்சென்ஸ் அணியை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய நாட்டுக்காகவும், கிளப்புக்காவும் விளையாடிய ஆட்டங்களில் அதிக மற்றும் 800 கோல்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
அதனை தொடர்ந்து ஆட்டத்தின் 70வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திய ரொனால்டோ. அதை கோலாக மாற்றினார். இதன் மூலம் 801 கோல் என்ற மைல்களை எட்டினார்.