பிரீமியர் லீக் கால்பந்து ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி பெற்றது.
பிரீமியர் லீக் கால்பந்து நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நார்விச் - மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் போராடி கோல் அடிக்க முயற்சி செய்தன. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காமல் ஆட்டம் சமநிலையில் இருந்தது. ஆட்டத்தின் 75வது நிமிடத்தில் ரொனால்டோவின் ஸ்டிரைக் வந்தது, யுனைடெட் 1-0 என வெற்றியைப் பதிவு செய்ய அது போதுமானதாக இருந்தது.
இதனை சரியாக பயன்படுத்தி மான்செஸ்டர் யுனைடெட் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். எனவே மான்செஸ்டர் அணி 1-0 என முன்னிலை பெற்றது. இதனால் மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி பெற்றது.