games

img

விளையாட்டு

கோப்பையை கொடுத்து வீரர்களுடன் கொண்டாட்டம் விளையாட்டு நிகழ்வுகளிலும் டிரம்ப் அடாவடி

சர்வதேச கால்பந்து சம்மேள னத்தால் நடத்தப்படும் கிளப் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 21ஆவது சீசன் அமெரிக்காவில் நடை பெற்றது. இந்த தொடரின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து கிளப் அணி யான செல்சி 3-0  என்ற கோல் கணக்கில், பிரான்ஸ் கிளப் அணியான பிஎஸ்ஜி-யை வீழ்த்தி இரண்டாவது முறையாக கிளப் உலகக்கோப்பையை கைப் பற்றியது. போட்டியை நடத்தும் நாடு என்ற பெயரில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவரான (பிபா) கியானி இன்பன்டி னோ இணைந்து சாம்பியன் பட்டம்  வென்ற செல்சி அணிக்கு கோப்பையை வழங்கினர். பொதுவாக விளையாட்டு உலகில் யார் கோப்பையை வழங்கி னாலும், கோப்பையை கொடுத்தவுடன் மேடையை விட்டு வெளியேற வேண்டும். வீரர்களின் வெற்றிக் கொண் டாட்டத்தில் பங்குபெறக் கூடாது. இது விதி மட்டுமின்றி, மரபு சார்ந்த  பாரம்பரிய விஷயம் ஆகும். ஆனால் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கோப்பையை செல்சி வீரர்களி டம் கொடுத்துவிட்டு, விதிகளை மீறி வீரர்களுடன் கொண்டாட்டத்தில் பங்கேற்றார். பிபா தலைவர் அழைத்தும் வரவில்லை மேடையில் இருந்து டிரம்ப் இறங்கா ததை கண்ட பிபா தலைவர் கியானி இன்பன்டினோ கையை பிடித்து இருமுறை இழுத்தார். ஒருமுறை பெயரை சொல்லியும் அழைத்தார்.  ஆனால் கியானி இன்பன்டினோ வின் அழைப்பை புறக்கணித்து, செல்சி வீரர்களுடன் கொண்டாட்டத் தில் டிரம்ப் பங்கேற்றார்.  இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விளை யாட்டு உலகம் கடந்த 2நாட்களாக சமூக வலைத்தளங்கள் மூலம் கடும் கண்ட னம் தெரிவித்து வருகிறது.

உலகின் வயதான மாரத்தான் வீரர் விபத்தில் உயிரிழந்தார்  “டர்பனேட் டோர்னாடோ” என்று புகழப்பட்டவர்

உலகின் மிகவும் வயதான மாரத் தான் வீரர் என்ற சிறப்பைப் பெற்றவர் பவுஜா சிங். 114 வயது. பஞ் சாப் மாநிலத்தில் 1911ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி பிறந்தவர். மனைவி மற்றும் மகன் இறந்த துக்கத்தில் இருந்து மீள மாரத்தான் ஓட ஆரம்பித்த பவுஜா சிங், 1993ஆம் ஆண்டு தனது 89 ஆவது வயதில் இங்கிலாந்து நாட்டிற்கு குடிபெயர்ந்தார்.  தனது 100ஆவது வயதில் டொராண் டோ வாட்டர் பிரண்ட் மாரத்தானில் பங் கேற்று உலகப் புகழ்பெற்றார். 2000 முதல் 2013ஆம் ஆண்டு வரையிலான 13 ஆண்டுகளில் 9 மாரத்தான் போட்டி களில் பங்கேற்றார்.  இதில் லண்டன் மாரத்தானில் களமிறங்கி, பந்தய தூரத்தை 6:54 மணிநேரத்தில் முடித்து சாதனையும் படைத்திருந்தார். எல்லிஸ் தீவு பதக்கம் இன சகிப்புத்தன்மையின் அடை யாளமாக இருந்ததற்காக, 2003ஆம் ஆண்டு பவுஜா சிங்குக்கு “எல்லிஸ் தீவு பதக்கம்” வழங்கப்பட்டது. இந்த கவு ரவத்தை பெற்ற முதல் அமெரிக்கர் அல்லாதவர் என்ற பெருமையை  பவுஜா சிங் பெற்றிருந்தார். மேலும் 2011 ஆம்  ஆண்டில் பவுஜா சிங்கிற்கு “இந்தியா வின் பெருமை” என்ற பட்டமும் வழங்கப்பட்டது.  “டர்பனேட் டோர்னாடோ” எனப்  புகழப்படும் பவுஜா சிங் செவ்வாய்க் கிழமை காலை 3.30 மணியளவில்  பஞ் சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள பீயாஸ் பிந்த் கிராமத்தில் அடையாளம் தெரி யாத வாகனம் மோதியதில் படுகாய மடைந்தார். பலத்த காயமடைந்த பவுஜா சிங்கை, அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த னர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை  அளித்தும் பவுஜா சிங், சிகிச்சை பல னின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பவுஜா சிங்கின் மறைவிற்கு விளை யாட்டு வீரர்கள் அரசியல் கட்சித்  தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.