உலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று பிரேசில் அணி தகுதி
23ஆவது சீசன் உலகக் கோப்பை கால்பந்து போட்டி கள் 2026 ஜூன் 11ஆம் தேதி முதல் ஜூலை 19ஆம் தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் கூட்டாக நடைபெறுகிறது. தற்போது இந்த தொடருக்கான உலகம் முழுவதும் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புதனன்று அதி காலை நடைபெற்ற தென் அமெரிக்க கண்டத்திற்கான உலகக்கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் பிரேசில் - பராகுவே அணிகள் (சாவ் பாவ்லோ நகரில் - பிரேசில்) பலப்பரீட்சை நடத்தின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் வினீசியஸ் ஜூனியரின் (44ஆவது நிமிடம்) அசத்தலான கோலால் அந்த அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பிரேசில் அணி 25 புள்ளிகளுடன் உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. அந்த அணி 23ஆவது முறையாக உலகக் கோப்பை போட்டிக்கு முன்னேறி யுள்ளது. தென் அமெரிக்க கண்டத்தில் இருந்து மொத்தம் 6 அணிகள் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெறும் என்ற நிலையில், இதுவரை அர்ஜெண்டினா, ஈகுவடார், பிரேசில் அணிகள் தகுதி பெற்றுள்ளன. மீத முள்ள 3 இடங்களுக்கு உருகுவே, பராகுவே, கொலம்பியா, வெனிசுலா ஆகிய 4 அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இன்று விடுமுறை இனி சேலத்தில் டிஎன்பிஎல் ஆட்டங்கள்
தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) தொட ரின் 9ஆவது சீசன் வியாழக் கிழமை அன்று கோயமுத் தூரில் தொடங்கியது. கோய முத்தூர் எஸ்என்ஆர் மைதா னத்தில் இதுவரை 8 லீக் ஆட்டங்கள் நடைபெற்ற நிலையில், சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள மைதானத்தில் (Salem Cricket Foundation Stadium) 9ஆவது லீக் ஆட்டங்கள் முதல் 17ஆவது லீக் ஆட்டங்கள் வரை நடைபெறுகிறது. இடம்பெயர்வு மற்றும் இதர நிகழ்வுகளுக்காக வியாழக்கிழமை அன்று டிஎன்பிஎல் தொடருக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வெள்ளிக் கிழமை அன்று நடைபெறும் 9ஆவது லீக் ஆட்டத்தில் சேலம் - திருப்பூர் அணிகள் மோதுகின்றன.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆஸ்திரேலியா திணறல்
3ஆவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொட ரின் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியாவும், தென் ஆப்பிரிக்காவும் தகுதி பெற்ற நிலையில், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி புதன்கிழமை அன்று மாலை 3 மணிக்கு இறுதிப்போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் களமிறங் கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கம் முதலே தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சில் கடுமையாக திணறியது. மதிய உணவு நேர இடைவெளியின் படி ஆஸ்திரேலிய அணி 23.2 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்து இருந் தது. மூத்த வீரர் ஸ்மித் 26 ரன்களுடன் களத்தில் இருந்தார். காவஜா (0), கேமரூன் கிரீன் (4), டிராவிஸ் ஹெட் (11), லபுஸ்சாக்னே (17) ஆகி யோர் ஆட்டமிழந்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபடா, ஜேன்சன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். (மாலை 6 மணி நிலவரம்)