தொடரைக் கைப்பற்றுமா இந்தியா?
இன்று 2-ஆவது ஒருநாள் போட்டி
தென் ஆப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை ருசித்த நிலையில், 2-ஆவது ஒருநாள் போட்டி பெர்ஹாவில் செவ்வாயன்று நடைபெறுகிறது. தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணியும், பதிலடி கொடுக்கும் முனைப்பில் தென் ஆப்பிரிக்க அணியும் என இரு அணிகளும் வெற்றியின் மீது குறியாக களமிறங்குவதால் 2-ஆவது ஒருநாள் போட்டி பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா
இடம் : செயின்ட் ஜார்ஜ் மைதானம், பெர்ஹா
நேரம் : மாலை 4:30 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள், ஹாட் ஸ்டார்
(ஒடிடி) - இலவசம் கிடையாது. சந்தா தொகை செலுத்தி இருந்தால் ஸ்மார்ட் போன் மற்றும் ஸ்மார்ட்டிவிகளில் ரசிக்கலாம்.
மழை : வாய்ப்புள்ளது
“பிங்க் ஜெர்ஸி”
டாப் டிரெண்டிங்கில் தென் ஆப்பிரிக்கா
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஒவ்வொரு ஆண் டும் ஒரு போட்டியில் (தோரா யமாக) மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு தொடர்பாக “பிங்க் நிற ஜெர்ஸியை” அணிந்து விளையாடுவது வழக்கம். அதே போல நடப்பாண்டில் இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் பொழுது தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் “பிங்க் நிற ஜெர்ஸியுடன்” களமிறங்கி னர். கடந்த காலங்களை போலவே நடப்பாண்டி லும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பலத்த பாராட்டுகளை பெற்றுள்ளது. மேலும் சமூகவலைத்தளங்களில் தென் ஆப்பிரிக்கா நாட்டின் பெயர் மற்றும் பிங்க் நிற ஜெர்ஸி டாப் டிரெண்டிங்கில் வைரலாகி வருகிறது.
பிங்க் ஜெர்ஸியின் அடிப்படை
மார்பக புற்றுநோய் சிகிச்சை, புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சி, நோயாளிகளின் பராமரிப்பு, நிதி சேகரிப்பு உள்ளிட்டவைகளை வலியறுத்தி தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பிங்க் நிறத்தில் களமிறங்குகிறது. முக்கியமாக போட்டியில் கிடைக்கும் வருவாயில் குறிப்பிட்ட பங்கு மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் களுக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
கேப்டன் பதவி கொடுத்தால் மட்டுமே மும்பைக்கு வருவேன்
அடம்பிடித்து சாதித்த ஹர்திக் பாண்டியா
உலகின் முதன்மையான உள்ளூர் டி-20 தொடரான ஐபிஎல் தொட ரில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மும்பை அணியின் கேப்டனாக இருந்து 5 முறை கோப்பையை பெற்றுக் கொடுத்த ரோஹித் சர்மா கேப்டன் பதவி யில் இருந்து துரத்தப்பட்டு, குஜராத் அணியின் கேப்டனாக இருந்த இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நிய மித்துள்ளது அம்பானியின் மும்பை அணி நிர்வாகம். இதற்கு மும்பை ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அந்த அணியின் கொடியை எரித்தும், சமூகவலைத் தளங்களில் அன்பாலோ வேலையை தொடங்கியுள்ள நிலையில், தனக்கு கேப்டன் பதவியை கொடுத்தால் மட்டுமே மும்பை அணிக்கு வருவேன் என ஹர்திக் பாண்டியா அடம்பிடித்து ள்ளதாகவும், இதனை ஏற்று ரோஹித் சர்மாவை நீக்கி கேப்டன் பொறுப்பை அவருக்கு வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரோஹித் சர்மா நீக்கத்திற்கு மும்பை அணிக்குள் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புரோ கபடி 2023
10-ஆவது சீசன் புரோ கபடி தொடரில் 3-ஆம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடைபெற்று வரும் நிலையில், செவ்வாயன்று ஒரே ஒரு லீக் ஆட்டங்கள் மட்டுமே நடைபெறுகிறது.
அடுத்து தமிழ்நாட்டில்...
புரோ கபடி லீக் தொடரின் 4-ஆவது கட்ட லீக் ஆட்டங்கள் டிசம்பர் 22 முதல் தமிழ்நாடு தலைநகர் சென்னையில் தொடங்கவுள்ளது. டிசம்பர் 27 வரை சென்னையில் லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ள நிலையில், டிக்கெட் தேவைக்கு https://in.bookmyshow.com/ என்ற லிங்கை கிளிக் செய்து டிக்கெட் பெறலாம்.
இடம் : பலேவாடி கம்பளக்ஸ், புனே, மகாராஷ்டிரா
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள், ஹாட் ஸ்டார் (ஒடிடி - இலவசம் இல்லை, சந்தா கட்டணம் செலுத்தி இருந்தால் பார்க்கலாம்)