games

img

புரோ கபடி பிரதீப் நார்வல் மீண்டும் திணறல்

புரோ கபடி பிரதீப் நார்வல் மீண்டும் திணறல்

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த முன்னணி கபடி வீரராக இருப்பவர் பிரதீப் நார்வல் (26). இவர் ஹரியானா மாநில அணிக்கும், இந்திய தேசிய அணிக்காகவும், புரோ கபடி தொடரில் உத்தரப்பிரதேச அணிக்காகவும்  விளையாடி வருகிறார்.  தேசிய அளவில் ஹரியானா அணிக்காக பல்வேறு கோப்பைகளை பெற்றுத் தந்த பிரதீப் நார்வல், உலகளவில் இந்தியாவிற்காக 4 தங்கப்பதக்கங்களை பெற்றுத் தந்துள்ளார். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, புரோ கபடி தொடரில் உத்தரப்பிரதேச அணிக்காக விளையாடி வரும் பிரதீப் நார்வல் கடந்த 3 ஆண்டுகாலமாக சரியாக விளையாட முடியாமல் கடுமையாக திணறி வருகிறார்.

அணியில் விளையாட பிடிக்கவில்லையா?

புரோ கபடி தொடரில் கடந்த 2015 சீசன் முதல் விளையாடி வரும் பிரதீப் நார்வல் தொடக்கத்தில் பெங்களூரு அணிக்காக ஒரே ஒரு சீசன் மட்டும் (2015) விளையாடினார். அதன்பிறகு 2016 முதல் 2019 வரை பாட்னா அணிக்கு 3 சீசனில் விளையாடினார். இந்த 3 சீசனிலும் பிரதீப் நார்வலின் அசத்தலான ஆட்டத்தால் பாட்னா அணி ஹாட்ரிக் சாதனையுடன் அடுத்தடுத்து சாம்பியன் பட்டம் வென்றது. மேலும் புரோ கபடி தொடரில் 1,500 புள்ளிகளை குவித்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்தார் பிரதீப் நார்வல். 1000 புள்ளிகளை குவித்த முதல் வீரர் சாதனையும் பிரதீப்பிடம்தான் உள்ளது. அதன்பிறகு 2 ஆண்டுகள் காயம் மற்றும் இதர பிரச்சனை காரணமாக ஓய்வில் இருந்த பிரதீப் நார்வல், 2021 சீசன் முதல் உத்தரப்பிரதேச அணிக்கு ஏலம் மூலம் தேர்வானார். 2021, 2022 சீசனில் பிரதீப் சரியாக விளையாட முடியாமல் திணறினார். பார்ம் பிரச்சனையில் இருந்து பிரதீப் மீள்வார் என நடப்பு சீசனிலும் உத்தரப்பிரதேச அணி நிர்வாகம் ஏலத்தில் தக்கவைத்தது.

திணறல்

நடப்பு சீசனில் உத்தரப்பிரதேசம் அணி தனது துவக்க ஆட்டத்தில் மும்பை அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் கடுமையாக திணறிய பிரதீப் நார்வல் ஒரு புள்ளி கூட எடுக்காமல் நீண்ட நேரம் பெஞ்சிலேயே அமர்ந்து இருந்தார். காயமா? இல்லை உத்தரப்பிரதேச அணியுடன் விளையாட பிடிக்கவில்லையா? வேறு எதாவது காரணமா என பல்வேறு சந்தேகங்கள் கிளம்பியுள்ளன.  

இன்றைய  ஆட்டம்

குறுகிய காலத்தில் பிரபலமான புரோ கபடி லீக் தொடரின் 10-ஆவது சீசன் சனியன்று தொடங்கிய நிலையில், தொடக்க ஆட்டங்கள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.

மும்பை - குஜராத்
(7வது லீக் )
நேரம் : இரவு 8 மணி