45 நாடுகள் பங்கேற்றுள்ள 19-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. அக்., 8 வரை இந்த தொடரில் போட்டியை நடத்தும் சீனா அனைத்து பிரிவுகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 2022இல் நடக்க வேண்டிய 19-ஆவது சீசன் ஆசிய விளையாட்டுப் போட்டி தாமதமாக 2023இல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்பிரின்ட் - வெண்கலம்
ஆடவர் கனு ஸ்பிரின்ட் (சூப்பர் பாஸ்ட் படகுப்போட்டி) 1,000 மீ இரட்டையர் பிரிவு இறுதிச் சுற்றில் இந்தியாவின் சுனில் சிங் - அர்ஜுன் சிங் ஜோடி பந்தைய தூரத்தை 3:53.329 நிமிடங்களில் எட்டி வெண்கலப்பதக்கத்தை வென்றது. இப்பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி (3:43.796 நிமிடம்) தங்கப்பதக்கமும், கஜகஸ்தான் அணி (3:49.991 நிமிடம்) வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.
பதக்கப் பட்டியல்'
தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1.சீனா 156 85 44 285
2.ஜப்பான் 33 45 49 127
3.தென்கொரியா 32 42 63 137
4.இந்தியா 13 24 26 63
கஜகஸ்தான் அபாரம்
ஆசிய விளையாட்டுப் போட்டியின் பதக்கப் பட்டியலில் 12-வது இடத்தில் உள்ள மத்திய ஆசிய நாடான கஜகஸ்தான் அனைத்து பிரிவுகளிலும் சிறப்பாக செயல்பட்டு பதக்க வேட்டையை அரங்கேற்றி வருகிறது. தங்கம் அதிகம் வெல்லவில்லை என்பதால் 12-வது இடத்தில் உள்ள கஜகஸ்தான் 5 தங்கம், 10 வெள்ளி, 30 வெண்கலம் என மொத்தம் 45 பதக்கங் களை வென்றுள்ளது. ஆனால் மொத்த பதக்கங் கள் வென்ற நாடுகளின் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. முயற்சியின் பலன் “முதலிடத்தை பிடிக்க முடியவில்லை என்றா லும், கடைசி வரை போராடி கிடைக்கும் பதக்க த்தை வாங்கி செல்வோம்” என்பது போல கஜ கஸ்தான் நாட்டின் விளையாட்டு நெறிமுறை உள்ளது. அதாவது இறுதிவரை போராடி 30 வெண்கலப்பதக்கத்தை வென்று அசத்தி யுள்ளது. அதிக வெண்கலம் வென்ற நாடு களின் பட்டியலில் இந்தியாவை விட அதிக பதக்கங்களை வென்று கஜகஸ்தான் நாடு 4-வது இடத்தில் உள்ளது. கஜகஸ்தான் நாடு கனு ஸ்பிரின்ட், ஜூடோ, துப்பாக்கிச்சுடுதல், வாள்சண்டை ஆகிய பிரிவுகளில் கணிசமான அளவில் பதக்கங்களை வென்றுள்ளது. கஜ கஸ்தான் போலவே மொத்த பதக்க எண்ணிக்கை யில் ஹாங்காங் (சீனா) 6 தங்கம், 15 வெள்ளி, 24 வெண்கலம் என 45 பதக்கங்களுடன் 9-வது இடத்திலும், மொத்த பதக்க எண்ணிக்கையில் 6-வது இடத்திலும் உள்ளது. ஈரான் (35), வட கொரியா (22), மலேசியா (21) ஆகிய நாடுகள் மொத்த பதக்க எண்ணிக்கையில் வலுவாக உள்ளது.
இறுதியில் லவ்லினா
மகளிர் 75 கி குத்துச்சண்டை பிரிவு அரை யிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் லவ்லினா, தாய்லாந்தின் பாய்சானை எதிர்கொண்டார். லவ்லினாவின் அதிரடி பன்ச்களை (குத்து) தாக்குப் பிடிக்க முடியாமல் திணறிய பாய்சான், 0-5 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்ந்து வெண்கலப்பதக்கம் வென்றார். வெற்றி பெற்ற இந்தியா வீராங்கனை லவ்லினா இறுதிக்கு முன்னேறினார். லவ்லினா இறுதிக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவிற்கு 75 கி குத்துச்சண்டை பிரிவில் கண்டிப்பாக தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் உறுதியாகியுள்ளது. இறுதிப்போட்டி புதனன்று நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குத்துச்சண்டையில் வெண்கலம்
மகளிர் 54 கி குத்துச்சண்டை பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ப்ரீத்தி, சீனா வின் யுவான் சாங்கை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய யுவான் சாங் 5-0 என்ற புள்ளிக்கணக்கில் ப்ரீத்தி யை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறி னார். தோல்வியடைந்த இந்தியா வின் ப்ரீத்தி குத்துச்சண்டை விதி களின்படி வெண்கலப்பதக்கம் வென்றார்.