games

img

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023

45 நாடுகள் பங்கேற்றுள்ள 19-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. அக்., 8 வரை இந்த தொடரில் போட்டியை நடத்தும் சீனா அனைத்து பிரிவுகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 2022இல் நடக்க வேண்டிய 19-ஆவது சீசன் ஆசிய விளையாட்டுப் போட்டி தாமதமாக 2023இல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டென்னிஸ் விளையாட்டில்  இந்தியாவிற்கு தங்கப்பதக்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டி டென்னிஸ் பிரிவின் கலப்பு இரட்டையர் இறுதி ஆட்டத் தில் இந்தியாவின் போபண்ணா - ரிதுஜா ஜோடி, சீன தைபேவின் லியாங் - ஹுவாங் ஜோடியை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சீன தைபே ஜோடி 6-2 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றியது. பின்னர் சுதாரித்துக்கொண்ட இந்திய ஜோடி 2-வது செட்டை 3-6 என்ற செட் கணக்கில் கைப்பற்றி பதிலடி கொடுக்க, டைபிரேக் ஆட்டத்தில் 10-4 என்ற கணக்கில் சீன தைபேவின் லியாங் - ஹுவாங் ஜோடியை வீழ்த்தி,  இந்தியாவின் போபண்ணா - ரிதுஜா ஜோடி தங்கப்பதக்கம் வென்றுள்ளது. 

துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒரு வெள்ளி

10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு அணி பிரிவில் சரப்ஜோத் சிங் , திவ்யா ஆகியோர் அடங்கிய இந்திய இணை, வெறும் 2 புள்ளிகள் பின்னிலையில், 14 புள்ளிக ளுடன் வெள்ளிப்பதக்கம் வென்றது. இந்திய ஜோடியிடம் தொடக்கத்தில் திக்கி திணறிய சீனாவின் ஜங், ஜியாங் ஜோடி கடும் போராட்டத்துடன் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக புள்ளிக ளை குவித்து 16 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றது. 

பதக்கப் பட்டியல்

    தங்கம்    வெள்ளி    வெண்கலம்    மொத்தம்
1.சீனா    108    66    33    207
2.ஜப்பான்    28    37    38    103
3.தென்கொரியா    27    28    53    108
4.இந்தியா    10    13    13    36

ஸ்குவாஸில் தங்கம்

ஸ்குவாஸ் ஆடவர் பிரிவில் சவுரவ் கோஷல், மனோக ரன் மகேஷ், அபய் சிங் ஆகியோர் அடங்கிய இந்திய  அணி பாகிஸ்தானின் நசீர், நூர், ஆஸிம் ஜோடியை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மனோகரன் மகேஷ் மட்டும் தோல்வியை தழுவினார். சவுரவ் கோஷல், அபய் சிங் ஆகியோர் வெற்றிபெற இந்திய அணி 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது. ஏற்கெனவே ஸ்குவாஷ்  பிரிவில் மகளிர் அணி வெண்கலப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. 

டாப் 10-இல் வடகொரியா

ஆசிய விளை யாட்டு போட்டியில் தனக் கென்று ஒரு தனி ஆதிக் கத்தை வைத்துள்ள வடகொரியா பதக்கப் பட்டியலில் அதிகப்பட்ச மாக டாப் 10-இல் இடம் பெறும். குறைந்தப் பட்சம் டாப் 16-க்குள் இடம்பெற்றுவிடும். அதற்கு மேல் கீழே இறங்காது. இதுதான் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கும், வடகொரியாவுக்கும் உள்ள பிணைப்பு. ஆனால் நடப்பு சீசனில் முதல் வாரத்தில் வடகொரியா சரியாக பதக்கங்களை குவிக்கவில்லை. இதனால் நடப்பு சீசன் ஆசிய விளையாட்டில் வடகொரியா அவ்வளவுதான் என தென் கொரியா, ஜப்பான் சார்பு ஊடகங்கள் செய்தி (மறைமுகமாக) வெளியிட்டு குளிர் காய்ந்தன.  இந்நிலையில், வடகொரியா எப்பொழுதும் போல ஆசிய விளையாட்டுப் போட்டியில் தனது ஆதிக்கத்தை தாங்கிப் பிடித்து டாப் 10-க்குள் நுழைந்து அசத்தியுள்ளது.  வட கொரியா 4 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் என 14 பதக் கங்களுடன் பதக்கப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. இன்னும் 8 நாட்கள் உள்ள நிலையில், வடகொரியா மேலும் பல இடங்கள் மேல்நோக்கி முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.