பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியின் மகளிருக்கான 50வது எடைப்பிரிவு இறுதிப் போட்டிக்கு, வினேஷ் போகத்திடம் அரையிறுதியில் தோல்வியடைந்த கியூப வீராங்கனை தகுதி பெற்றுள்ளார்.
இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மகளிருக்கான 50 கிலோ எடைப்பிரிவில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், கியூபாவின் யூஸ்னிலிஸ் குஸ்மானை 5-0 என முற்றிலுமாக வீழ்த்தி இறுதிக்குத் தகுதி பெற்று, சாதனை படைத்திருந்தார்.
இறுதிப் போட்டிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்திருந்த நிலையில், உடல் எடை கூடுதலாக 100 கிராம் இருப்பதாகக் கூறி வினேஷ் போகத் போட்டியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
முதலில், தங்கப் பதக்கம் இறுதிக்குத் தகுதி பெற்ற அமெரிக்க வீராங்கனைக்கு வழங்கப்படும் என்றும், வெள்ளிப் பதக்கம் யாருக்கும் வழங்கப்படாது என்று கூறப்பட்டது. இந்நிலையில், அரையிறுதியில் வினேஷ் போகத்திடம் தோல்வி அடைந்த கியூபா வீராங்கனை இறுதிக்கு முன்னேறியிருப்பதாகக் கூறப்படுகிறது.