tamilnadu

img

விவசாய சீர்திருத்தத்தின் 60வது ஆண்டை கொண்டாடிய ’கியூபா’

கியூபா மக்களுக்கு விவசாய சீர்திருத்தத்தின் மூலம் நிலங்களை பகிர்ந்தளித்த 60வது ஆண்டு தினத்தை நேற்று ’கியூபா’ கொண்டாடியுள்ளது.


கடந்த மே17, 1959 அன்று பிடல் காஸ்ட்ரோ என்ற மகத்தான தலைவர் தன்னுடைய வாக்குறுதிகளில் ஒன்றான நீண்ட காலமாக விவசாய தொழிலாளர்களாக பணிபுரிந்த கியூபா நாட்டு மக்களுக்கு விவசாய நிலங்களை பகிர்ந்தளிக்க விவசாய சீர்திருத்த சட்டம் கையெழுத்தானது. அமெரிக்காவின் புர்டான் சட்டத்தின் கடுமையான எதிர்ப்புக்கிடையே இந்த சமூக புரட்சிகர சாதனை நிகழ்த்தப்பட்டது.


இந்த புரட்சி நாளை ஒவ்வொரு ஆண்டும் அந்நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர். நேற்று 60வது ஆண்டு தினத்தை கியூபா தலைநகர் ஹவானாவில் மக்கள் பலர் ஒன்று கூடி கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர். இதுகுறித்து கியூபா குடியரசுத்தலைவர் மிகுவல் டியாஸ்-கேனல் சீர்திருத்தத்தின்போது பிடல் காஸ்ட்ரோ கூறிய குறித்து கருத்துகளை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.