டோக்கியோ
மாற்று திறனாளிகளுக்காக நடத்தப்படும் கோடை கால ஒலிம்பிக் தொடர் பாராலிம்பிக் என அழைக்கப்படுவது வழக்கம். இந்த தொடரின் 16-வது சீசன் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளை தொடங்குகிறது.
செப்டம்பர் 5-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 163 நாடுகளைச் சேர்ந்த 4,537 வீரர்- வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இந்தியா சார்பில் 54 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. 22 விளையாட்டு பிரிவுகள் இருந்து மொத்தம் 540 போட்டிகள் நடைபெற உள்ளது.
2016-ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ பாராலிம்பிக் தொடரின் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தொடக்க விழாவில் தேசிய கொடி ஏந்துகிறார். கொரோனா பரவல் காரணமாக தொடக்க விழாவில் ஒவ்வொரு நாடுகளின் சார்பிலும் 6 அதிகாரிகள் மட்டுமே பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 5 வீரர்கள், 6 அதிகாரிகள் என 11 பேர் மட்டுமே தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார்கள்.