games

img

விளையாட்டு...

தொடரும் மோடி அரசின் பழிவாங்கல் நடவடிக்கை பஜ்ரங் புனியாவிற்கு 4 ஆண்டுகள் தடை

இந்திய மல்யுத்த விளை யாட்டின் நட்சத்திர வீரரும், டோக்கியோ (ஜப்பான்) ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான பஜ்ரங் புனியாவிற்கு தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் 4 ஆண்டுகள் மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை விதித்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றப் பின் பஜ்ரங் புனியா ஊக்கமருந்து பரிசோதனைக்கு மாதிரிகளை வழங் காத குற்றச்சாட்டின் அடிப்படை யில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக விளக்கம்  அளிக்கப் பட்டுள்ளது. 

வலுக்கும் கண்டனம்

ஊக்க மருந்து விவகாரத்தில் கடந்த மார்ச் மாதம் பஜ்ரங் புனியா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் மேல்முறை யீட்டு மனுவில் தடை நீக்கப்பட்டது. தற்போது இறுதி தீர்ப்பில் பஜ்ரங் புனியா விற்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப் பட்டுள்ளது. 

மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மற்றும் வீராங்கனைகள்  வினேஷ் போகத், சாக்சி மாலிக் ஆகியோர் பாலியல் குற்றச் சாட்டுக்குள்ளான மல்யுத்த சம்மேள னத்தின் முன்னாள் தலைவரும், முன் னாள் பாஜக எம்.பி.,யுமான பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக தில்லியில் போராட்டம் நடத்தினார்கள். 

மோடி அரசின் அடாவடியால் சாக்சி மாலிக் மல்யுத்தத்தை விட்டே விலகி விட்டார். பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். பாஜகவிற்கு நெருக்கமான பிரிஜ் பூஷணுக்கு எதிராக போராடியதன் காரணமாகவே வினேஷ் போகத்தைப் (பாரீஸ் ஒலிம்பிக் - 100 கிராம் எடை  - பதக்கம் பறிப்பு) போலவே பஜ்ரங்  புனியா மோடி அரசால் பழிவாங்கப் பட்டுள்ளார் என நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

28 பந்துகளில் 100 ரன்கள் கிரிக்கெட் உலகை மிரள வைத்த இந்தியர்

நாட்டின் முதன்மையான டி-20 தொடரான சையத் முஷ்டாக்  அலி டிராபியின் 35ஆவது லீக் ஆட்டத்தில்  திரிபுரா - குஜராத் அணிகள் மோதின. 

முதலில் பேட்டிங் செய்த திரிபுரா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய குஜராத் அணி தொடக்க வீரர் உர்வில் படேலின் அதி ரடியால் 10.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் உர்வில் படேல் 28 பந்துகளில் சதமடித்து, 35 பந்து களில் 12  சிக்ஸர், 7 பவுண்டரிகள் என  322.86 ஸ்டிரைக் ரேட்டுடன் 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் குஜராத் அணியின் வெற்றிக்கு உதவினார்.

உலகளவில் 2ஆவது வீரர்

இந்த ஆண்டு தொடக்கத்தில் எஸ்டோனியா நாட்டின் சாஹில் சௌஹான் சைப்ரஸ் அணிக்கெதிராக 27 பந்துகளில் சதமடித்ததே கிரிக்கெட் உலகின் அதிவேக சதமாகும். சாஹில் சௌஹானுக்குப் பிறகு அதிவேக சதமடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் உர்வில் படேல் (28 பந்துகள் 100 ரன்கள்). குறிப்பாக இந்தியா சார்பில் அதிவேக டி-20  சதமடித்த வீரர் என்ற ரிஷப் பண்ட் சாத னையை உர்வில் படேல் முறியடித் தார். ரிஷப் பண்ட் 2018-இல் சையத் முஷ்டாக் அலி டிராபியில் இமாச்சலப் பிரதேசத்திற்கு எதிராக 32 பந்து களில் சதம் விளாசினார் என்பது குறிப் பிடத்தக்கது. 

கடந்த நவம்பர் 27, 2023 அன்று  சண்டிகரில் அருணாச்சலப் பிரதேசத் திற்கு எதிரான விஜய் ஹசாரே டிராபி யில் குஜராத்துக்காக உர்வில் படேல்  41 பந்துகளில் சதமடித்தார். இது 2009இல் இந்திய அணியின் முன்னாள் வீரர் யூசுப் பதானின் 40 பந்துகளில் சதத்திற்குப் பிறகு ஒரு இந்தியரின் இரண்டாவது விரைவான சதமாகும்.