games

img

விளையாட்டு...

இணையத்தில் தற்போது அதி கம் பேசப்படும் நபராக ஒரே நாளில் மாறியிருக்கிறார் 13 வயது நட்சத்திரம். சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இரண்டு நாட்கள் விறு விறுப்பாக நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் அனைவரின் புரு வத்தையும் உயர்த்தும் ஒரு சம்பவம் அரங்கேறியது. இந்த ஏலத்திற்கான இறுதிப் பட்டியலில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 1,574 வீரர்கள் இடம் பிடித்தனர். இவர்களில் 62 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 182  வீரர்கள் மொத்தம் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர்.

கிரிக்கெட் உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ஆஸ்தி ரேலியாவின் டேவிட் வார்னர்,  மெகா ஏலத்தில் பங்கேற்ற அவரை எந்த அணி யும் வாங்க முன்வரவில்லை. ஐபிஎல் கோப்பை வென்ற 8 கேப்டன்களில் ஒருவரான வார்னர் மற்றும் ஷர்துல் தாக்குர், மயங்க் அகர்வால், கேன் வில்லியம்சன், ஜானி பேர்ஸ்டோ ஆகியோ ரையும் எந்த அணியும் வாங்கவில்லை.

வரலாறு படைத்த சூர்யவன்ஷி

பீகாரைச் சேர்ந்த 13 வயதாகும் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. ஏலத்தில் எடுக்கப்பட்டதுதான் இந்த ஏலத்தின் முக்கிய அம்சமாகும். இவரது அடிப்படை விலை 30 லட்சம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், இந்த சிறுவனை வாரி அணைத்துக் கொள்ள தில்லி மற்றும் ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்கள் மல்லுக் கட்டினர். இறுதியாக 1 கோடி ரூபாய்க்கு  ராஜஸ்தான் அணி கொத்திக்கொண்டது இதன் மூலம் மிக குறைந்த வயதில், ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக மாறியிருக்கிறார் இந்த சிறுவன். இது யாருமே எதிர்பாராத நிகழ்வாகும்.

யார் இவர்?

சாதனை நாயகனாக வலம் வரப் போகும் 13 வயதாகும் இந்தச் சிறுவன் பீகாரை சேர்ந்தவர் என்றாலும், அவரது  திறமையை உலகறிய செய்த இடம்  சென்னை சேப்பாக்கம் மைதானம்தான். சென்னையில் நடந்த ஆஸ்திரேலியா வுக்கு எதிரான 19 வயதிற்குட்பட்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக களம் இறங்கி 62 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து மிரட்டினார். 13 வயது 188 நாட்களேயான அவர் சதமடித்து கவனத்தை ஈர்த்தார். கிரிக்கெட் வர லாற்றில் மிக இளம் வயதில் அதிவேக சதம் அடித்தவர் என்ற பெருமையை பெற்றார்.

ஐபிஎல் தொடர் தொடங்கிய காலத்தில் பிறக்காத இந்த சிறுவன், 2025 ஆம் ஆண்டின் போட்டிகளில் விளையாட உள்ளார். இளம் வயதில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் சாதனை நாயகன். 12 வயது 284 நாட்களில், 2023-24-ல் ரஞ்சி கோப்பை யில் அறிமுகமானார். ரஞ்சி கோப்பை  வரலாற்றில் மிகச் சிறிய வயதில் அறி முகமான வீரர் என்ற பெருமையை பெற்றார். முன்னதாக, யுவராஜ் சிங் தனது 15 வயது 57 நாட்களிலும், சச்சின் 15 வயது 230 நாட்களிலும் அறிமுகமா னார். தற்போது இவர்களை விட மிக குறைந்த வயதில் அறிமுகமாகி சாதித்துள்ளார் சூர்யவன்ஷி.

கூடைப்பந்து: ஆசிய கோப்பைக்கு இந்தியா தகுதி

இந்திய கூடைப்பந்து சங்கம் சார்பில் சர்வதேச அள விலான போட்டி சென்னை நேரு உள்விளை யாட்டு அரங்கில் நடைபெற்றது. தகுதிச் சுற்றில் கஜகஸ்தான் அணியை இந்தியா, 88-69 என்ற புள்ளிகள்  கணக்கில் வீழ்த்தி அசத்தல் வெற்றியை பதிவு செய்து,  புள்ளி பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. இதன் மூலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்திய அணி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை நோக்கி முன்னேறியுள்ளது.

இந்திய அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ளன. அடுத்த ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி நடை பெறும் போட்டியில் ஈரான் அணியையும், 24ஆம் தேதி நடைபெறும் போட்டியில் கத்தார் அணியையும் எதிர்த்து பலப்பரீட்சை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் உற்சாகம்

முதல் போட்டியில் கத்தார் அணியிடம் அடைந்த தோல்விக்கு கஜகஸ்தான் அணியிடம் பழி தீர்த்துக் கொண்டது இந்திய அணி. முதல் முறையாக சென்னை யில் நடைபெற்ற போட்டியில் முதல் ஆட்டத்தில், இந்திய அணி தோல்வியடைந்ததால் துவண்ட ரசிகர்களை இந்த வெற்றி உற்சாகப்படுத்தி உள்ளது. இந்த போட்டியை, இது வரை இல்லாத அளவிற்கு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கண்டு ரசித்து இந்திய அணியை உற்சாகப்படுத்தினர்.