games

img

விளையாட்டு...

பெர்த் டெஸ்ட் இந்திய அணி அபார வெற்றி

5 போட்டிகளைக் (பார்டர் - கவாஸ்கர் டிராபி) கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய நாட்டிற்குச் சுற்றுப் பயணம் மேற் கொண்டுள்ளது. இந்த டெஸ்ட் தொட ரின் முதல் ஆட்டம் ஆஸ்திரேலிய நாட் டின் பெர்த் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் களமிறங்கிய நிலையில், ஹாசில்வுட் (4 விக்கெட்டு கள்) பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியைப் போல ஆஸ்திரேலிய அணியும் பும்ரா (5 விக்கெட்டுகள்) பந்துவீச்சை சமா ளிக்க முடியாமல், முதல் இன்னிங்ஸில் 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜெய்ஸ்வால், கோலி அசத்தல் 46 ரன்கள் முன்னிலையுடன் இரண் டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸை போல அல்லாமல், ஆஸ்திரேலிய பந்து வீச்சை திடமாக கணித்து ரன்வேட்டை நிகழ்த்தியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் - கே.எல்.ராகுல் பெர்த் மைதானத்தில் நங்கூரம் அமைத்து நிதான வேகத்தில் ரன்  குவித்தனர். கே.எல். ராகுல் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தினார். ஜெய்ஸ்வால் 161 ரன்கள் (297 பந்துகள், 3 சிக்ஸர், 15 பவுண்டரி) எடுத்து  ஆட்டமிழந்தார். அனுபவ வீரர் கோலி  (100)  அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்தார். கோலி சதமடித்தப் பின் இந்திய அணி இரண்டாவது இன்னி ங்ஸை டிக்ளர் செய்தது. இந்திய அணி 134.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு  487 ரன்கள் குவித்து, ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 534 ரன்கள் நிர்ண யம் செய்தது. கோலி (100 ரன்கள்) - நிதிஷ் (38 ரன்கள்) ஆகியோர் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்தி ரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக லயன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  ஆஸி.,  மீண்டும் சொதப்பல் 534 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, பும்ரா (3 விக்கெட்டுகள்)  - சிராஜ் (3 விக்கெட்டு கள்) ஜோடியின் வேகத்தை சமா ளிக்க முடியாமல் கடுமையாக திணறி யது. பும்ரா, சிராஜ் உடன் தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தர் (2 விக்கெட்டு கள்) சுழலில் மிரட்ட ஆஸ்திரேலிய அணி யின் மிடில் ஆர்டர் சுக்கு நூறாக நொறுங்கியது. அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் (89 ரன்கள்), மிட்சல் மார்ஷ் (47 ரன்கள்), அலெக்ஸ் காரே (36 ரன்கள்) கடைநேர போராட்டமும் பலனளிக்கவில்லை. இறுதியில் ஆஸ்திரேலிய அணி 58.4 ஓவர்களில் 238 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன்மூலம் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 5 போட்டி களைக் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0  என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.  8 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப் பட்டார். தொடர்ந்து 2ஆவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6ஆம் தேதி நடை பெறுகிறது.

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்கியது

சிங்கப்பூரில் திங்கள்கிழமை மாலை உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்கியது. டிசம்பர் 14ஆம் தேதி வரை மொத்தம் 14 சுற்றுகளாக கிளாசிக்கல் முறையில் நடைபெறும், இந்த உலக செஸ்  சாம்பியன்ஷிப் தொடரில் தமிழ்நாட்டின் குகேஷ், சீனாவின் டிங் லிரேன் மோதுகின்றனர். 138 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த வீரர்கள் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் நேருக்கு நேர் மோதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.