games

img

ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா புதிய தேசிய சாதனை!  

நீரஜ் சோப்ராவின் முந்தைய சாதனையை தற்போது அவரே முறியடித்துள்ளார்.  

ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற டைமண்ட் லீக் தொடரில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.94 மீட்டர் தூரம் எறிந்து புதிய தேசிய சாதனை படைத்தார். இதன் மூலம் இந்த போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 90.31 மீட்டர் தூரம் எறிந்து முதல் இடத்தைப் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.  

முன்னதாக பின்லாந்தில் நடைபெற்ற பாவோ நூர்மி விளையாட்டுப் போட்டியில் 89.30 மீட்டர் தூரம் எறிந்து தேசிய சாதனை படைத்திருந்தார். அவரது சாதனையை தற்போது அவரே முறியடித்துள்ளார்.