ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ராவுக்கு உயரிய விருதான பரம் விசிஷ்ட் சேவா விருதை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவின் ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்ற தடகள வீரர் நீரஜ் சோப்ராவுக்கு உயரிய விருதான பரம் விசிஷ்ட் சேவா விருது வழங்கப்பட உள்ளது. ராணுவத்தில் சுபேதாராக பணியாற்றி வரும் நீரஜ் சோப்ராவுக்கு குடியரசு தினத்தையொட்டி இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
2020 டோக்கியோ ஒலிம்பிக் டிராக் அண்ட் ஃபீல்டில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றார். தடகள வீரர் ஈட்டி எறிதலில் 87.58 மீட்டர் தூரம் தாண்டி எறிந்து தங்கப்பதக்கத்தை வென்றார். இதனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாட்டின் உயரிய விளையாட்டு விருதான மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருதை நீரஜ் சோப்ராவுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.