டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி
ஞாயிறன்று நடைபெற்ற போட்டிகளின் முடிவுகள் 25ஆவது லீக் : வெற்றி - மேற்கு இந்தியத் தீவுகள் (தோல்வி - நேபாளம்) 26ஆவது லீக் : வெற்றி - அமெரிக்கா (தோல்வி - நமீபியா) 27ஆவது லீக் : வெற்றி - இந்தியா (தோல்வி - பாகிஸ்தான்)
இந்தியா - இலங்கை நாடுகளில் கூட்டாக நடைபெற்று வரும், டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 28ஆவது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - ஐக்கிய அரபு அமீரகம் (குரூப் டி) அணிகள் மோதின. தில்லியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரகம் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. ஐக்கிய அரபு அமீரகம் அணி சார்பில் அதிகபட்சமாக சோயப் கான் 68 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஓமர்ஜாய் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தொடக்கத்தில் திணறினாலும் ஜத்ரன் (53 ரன்கள்), ஓமர்ஜாய் (40 ரன்கள்) ஆகியோரின் நிதான அதிரடியால், 5 விக்கெட் வித்தியாசத்தில் (19.2 ஓவர்கள் : 162-5) அபார வெற்றி பெற்றது.
குளிர்கால ஒலிம்பிக் 2026 ஐஸ் ஹாக்கி பிரிவில் கனடா கலக்கல்
25ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இத்தாலி நாட்டின் மிலன், கார்டினா நகரில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆடவர் ஐஸ் ஹாக்கி பிரிவில் கனடா அணி தோல்வியையே சந்திக்காமல் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஞாயிறன்று நடைபெற்ற ‘குரூப் ஏ’ பிரிவு ஆட்டத்தில் கனடா 10-2 என்ற கணக்கில் பிரான்ஸை வீழ்த்தியது. இதன் மூலம், மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று, புதன்கிழமை நடைபெறவுள்ள காலிறுதிக்குத் தகுதி பெற்று கனடா முன்னேறியுள்ளது.
குளிர்கால ஒலிம்பிக் - 2026 பதக்கப் பட்டியல்
நாடுகள் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1. நார்வே 12 7 7 26
2. இத்தாலி 8 4 10 22
3. அமெரிக்கா 5 8 4 17
4. நெதர்லாந்து 5 5 1 11
5. சுவீடன் 5 5 1 11
