games

img

2022 உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு போர்ச்சுகல், போலந்து அணிகள் தகுதி

2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு போர்ச்சுகல், போலந்து, செனிகல் உள்ளிட்ட 27 அணிகள் தகுதி பெற்றுள்ளன. 

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் 21 ஆம் தேதி முதல் டிசம்பர் 18 ஆம் தேதி வரை கத்தாரில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த போட்டிக்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு போர்டோ நகரில் நடைபெற்ற ஐரோப்பிய கண்டத்துக்கான தகுதி சுற்றின் பிளே-ஆப் சுற்றில் போர்ச்சுக்கல் அணி நார்த் மசிடோனியா அணிகளை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து 8வது முறையாக உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. மற்றொரு பிளே-ஆப் சுற்றில் போலந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் சுவீடனை தோற்கடித்து உலக கோப்பை போட்டிக்கு தகுதிபெற்றது. 

ஆப்பிரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் செனிகல் 3-1 என்ற கோல் கணக்கில் எகிப்தைத் தோற்கடித்து 3-வது முறையாக உலக கோப்பை போட்டிக்குள் கால் பதித்தது. இதேபோல் கேமரூன், கானா, மொராக்கோ, துனிசியா அணிகளும் உலக கோப்பை வாய்ப்பை உறுதி செய்தன.

இதுவரை 27 அணிகள் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. மேலும் இரு இடங்கள் இன்று தெரியவரும். அதைத் தொடர்ந்து மீதமுள்ள 3 அணிகள் எவை என்பதை அறிய ஜூன் மாதம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இதற்கிடையே, உலக கோப்பை போட்டியின் குரூப் சுற்றுக்கான ‘டிரா’ நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது.