games

img

விளையாட்டு

உலகக்கோப்பை கால்பந்து 28 ஆண்டுகளுக்கு பிறகு நார்வே தகுதி

23ஆவது சீசன் உலகக் கோப்பை கால்பந்து போட்டி  அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11ஆம் தேதி முதல் ஜூலை 19ஆம் தேதி வரை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகளில் கூட்டாக நடை பெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 48 நாடுகள் பங்கேற்கும் நிலையில், தற்போது கண்டம் வாரியாக தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஐரோப்பா கண்டத்திற்கான தகுதிச் சுற்று ஆட்டத் தில் 29ஆவது நாடாக நார்வே தகுதி பெற்றது. இந்திய நேரப்படி திங்க ளன்று நடைபெற்ற இத்தாலிக்கு எதி ரான ஆட்டத்தில் நார்வே 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. நட்சத்திர வீரர் ஹாலந்த் 2 கோலும் (77 மற்றும் 79ஆவது நிமிடம்), நுசா (63), லார்ஸ் லார்சன் (93) ஆகியோர் நார்வே அணிக்காக வும், எஸ்போசிஸ்டோ (11) இத்தாலி அணிக்காகவும் கோலடித்தனர்.  முன்னாள் உலக சாம்பிய னான இத்தாலியை தோற்கடித்த தன் மூலம் நார்வே  28 ஆண்டு களுக்கு பிறகு உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதற்கு முன்பு  நார்வே 1998ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற உலகக்கோப்பை யில் தகுதி பெற்றது. முன்னதாக ஞாயிறன்று நடை பெற்ற தகுதிச் சுற்று ஆட்டத்தில் ரொனால்டோவின் போர்ச்சுக்கல் தகுதி பெற்றது. இதைத் தொடர்ந்து 29 ஆவது நாடாக ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நார்வே தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாலந்தை கொண்டாடும் நார்வே ரசிகர்கள்

ஹாலந்தை கொண்டாடும் நார்வே ரசிகர்கள் 28 ஆண்டுகளுக்கு பிறகு நார்வே உலகக்கோப்பைக்கு தகுதி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர், அந்த அணியின் நட்சத்திர வீரர் ஹாலந்த் தான். கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ஹாலந்த் இங்கிலாந்து கிளப் அணியான மான்செஸ்டர் அணிக்காக விளையாடி வருகிறார். இவரது தீவிர முயற்சியால் நார்வே  உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. பிறக்கவில்லை நார்வே கடைசியாக 1998ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் விளையாடியது. அப்பொழுது ஹாலந்த் பிறக்கவில்லை. 2000ஆம் ஆண்டு தான் பிறந்தார். ஆனால் 28 ஆண்டுகால நார்வே ரசிகர்களின் கால்பந்து தகுதி ஏக்கத்தை 25 வயதில் பெற்று தந்துள்ளார். இத்தகைய சூழலில் நார்வே ரசிகர்கள் நார்வே கொடிகளுடன், ஹாலந்தையும் கொண்டாடி வருகின்றனர்.

ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ்  இத்தாலியின் சின்னர் மீண்டும் சாம்பியன்

உலக தரவரிசையில் முன்னணியில் உள்ள வீரர்கள் மட்டும் பங்கேற்கும், “உலக ஏடிபி (ATP -  Association of Tennis  Professionals) பைனல்ஸ்” டென்னிஸ் தொடரின் 56ஆவது சீசன் ஐரோப்பா நாடான இத்தாலியின் டூரின் நகரில் நடைபெற்று வந்தது. இந்த தொடரின் இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி ஞாயிறன்று நள்ளிரவு நடைபெற்றது. தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஸ்பெயினின் அல்காரஸ், 2ஆவது இடத்தில் உள்ள இத்தாலியின் சின்னர் ஆகியோர் இறுதி ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்தினர். தொடக்கம் முதலே மிக பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 7-6 (7-4), 7-5 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்ற சின்னர், தொடர்ந்து 2ஆவது முறையாக ஏடிபி பைனல்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.