அமெரிக்காவின் மேஜர் லீக் சாக்கரில் (MLS) இன்டர் மயாமி அணிக்காக விளையாடும் அர்ஜெண்டினாவை சேர்ந்த லியோனல் மெஸ்ஸி, கோல்டன் பூட் விருதை வென்று வரலாறு படைத்துள்ளார்.
அர்ஜெண்டினாவை சேர்ந்த லியோனல் மெஸ்ஸி, இன்டர் மயாமி அணிக்காக கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். இந்த நிலையில், அமெரிக்காவின் மேஜர் லீக் சாக்கர் (MLS) இறுதி போட்டியில், நாஷ்வில்லியை வீழ்த்தி இன்டர் மயாமி அணி 5-2 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றது.
இந்த சீசனில், இன்டர் மயாமி அணியின் லியோனல் மெஸ்ஸி, கோல்டன் பூட் விருதை வென்று வரலாறு படைத்துள்ளார். மெஸ்ஸி, இந்த சீசனின் மொத்த கோல்கள் 29 மற்றும் 19 அசிஸ்ட்களும் வழங்கி அசத்தியுள்ளார்.