முதல்முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்ற அல்காரஸ்
2026ஆம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் 114ஆவது சீசனின், ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஸ்பெயினின் அல்காரஸ் - தரவரிசையில் 4ஆவது இடத்தில் உள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்தினர். இந்த ஆட்டத்தில் 2-6, 6-2, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்ற அல்காரஸ், முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் கோப்பையை கைப்பற்றினார். மேலும் இது அவருக்கு 7ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும். 25ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் முனைப்பில் களமிறங்கிய ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வியுடன் 2ஆம் இடம் பிடித்தார்.
கணிப்பை பாராட்டும் நடுவர்கள் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்த கார்த்திகா
சமீப காலமாக மகளிர் தேசிய ஜூனியர், சீனியர் மற்றும் பள்ளி அளவிலான கபடி தொடர்களில் நடுவர்கள் ஒரு தலைப்பட்சமான தீர்ப்பு களை வழங்கி வருகின்றனர். தேசிய ஜூனியர் மற்றும் பள்ளி அளவிலான கபடி தொடர்களில் தமிழ்நாடு அணிக்கு எதிராக மட்டுமின்றி சாய், ஹரியானா, கர்நாடகா, கேரளம் அணி களுக்கு எதிராக நடுவர்கள் தீர்ப்பு அடாவடியாக இருந்தது. பாராட்டு சமீபத்தில் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற மகளிர் தேசிய சீனியர் தொடரின் சில போட்டிகளிலும் நடு வர்களின் தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத் தியது. மற்ற அணி வீராங்கனைகள் நடு வர்களின் தீர்ப்பு தவறாக இருந்தா லும் கண்டுகொள்வது கிடையாது. ஆனால் தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத் திரம் கண்ணகி நகர் கார்த்திகா நடு வர்களின் தீர்ப்பு தவறு என்றால், “என்ன தவறு? எப்படி இதை கணித்தீர்கள்? ஆதாரம் இருக்கிறதா? மறு மதிப்பீடு செய்யுங்கள்” என தொடக்கத்திலேயே ஆட்டத்தை நிறுத்தி கேள்வி எழுப்பு கிறார். நடுவர் இதனை கண்டுகொள்ள வில்லை என்றால், கடும் வாக்குவாதத் தில் ஈடுபட ஆரம்பித்து விடுவார். எங்களுக்கு புள்ளிகள் வேண்டாம்; சரியான தீர்ப்பு கொடுங்கள்; இல்லை யென்றால் விளையாட மாட்டோம் என பயிற்சியாளரின் ஆதரவுடன் மற்ற தமிழ்நாடு வீராங்கனைகளை அழைத்துக்கொண்டு போட்டியின் பாதிலேயே கார்த்திகா கிளம்பிச் செல்ல முயன்ற சம்பவமும் நிகழ்ந்துள்ளன. இதனால் கண்ணகி நகர் கார்த்திகாவை நடுவர்கள் அஞ்சி உண்மையான தீர்ப்பு வழங்கி வரு கின்றனர். சண்டை சச்சரவு நிகழ்ந்தா லும், கார்த்திகாவின் போராட்டக் குணம், சரியான கணிப்பை நடுவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதிரடி ஆட்டம், அநீதியை எதிர்த்து உடனடியாக போராட்டம் என பல்வேறு சிறப்பு அம்சங்களை கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் கிளம்பியுள்ளது. இதற்கு சமூக வலைத்தளங்களே சாட்சி. ராஜஸ்தானை புரட்டியெடுத்த கார்த்திகா தேசிய மகளிர் சீனியர் கபடி தொட ரில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம் வெல்வதற்கு உறுதுணை யாக இருந்தவர் கண்ணகி நகர் கார்த்திகா தான். அவர் 6 போட்டி களில் விளையாடி 90 புள்ளிகளுக்கு மேல் குவித்தார். குறிப்பாக சீனியர் பிரிவில் பலமான அணிகளாக கருதப்படும் பஞ்சாப் (10 புள்ளிகள்), பீகார் (19 புள்ளிகள்), ராஜஸ்தான் (23 புள்ளிகள்), சண்டிகர் (22 புள்ளிகள்) அணிகளுக்கு எதிராக தனி ஆளாக 10க்கும் மேற்பட்ட புள்ளிகளை குவித்து கபடி உலகை கவனிக்க வைத்தார். குறிப்பாக ராஜஸ்தான், சண்டிகர் அணிகளுக்கு எதிராக 20க்கு மேல் புள்ளிகளை வென்று பிரமிக்க வைத்துள்ளார் கண்ணகி நகர் கார்த்திகா என அழைக்கப்படும் கார்த்திகா எக்ஸ்பிரஸ்.
நெதர்லாந்து செஸ் : இந்திய வீரர்கள் சாதிப்பார்களா?
நெதர்லாந்து நாட்டின் விஜ்க் ஆன் ஜீ நகரில் டாடா ஸ்டீல் 88ஆவது செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 13 சுற்றுகள் கொண்ட இந்த தொடரின் 12ஆவது சுற்று முடிவில் நோடிர்பெக் அப்துசத் தோரோவ் (உஸ்பெகிஸ்தான்) - 8.0 புள்ளிககுடன் முதலிடத்தில் உள்ளார். ஜவோகிர் சிந்தாராவ் (உஸ்பெகிஸ் தான்) - 7.5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், வான் பாரஸ்ட் (ஜோர்டான்), ஹான்ஸ் நீமான் (அமெ ரிக்கா), வின்சென்ட் கீமர் (ஜெர்மனி) ஆகியோர் - 7.0 புள்ளிகளுடன் முதல் 5 இடங்களில் உள்ளனர். 7 புள்ளிகளுக்கு கீழ் இந்திய நட்சத்திரங்களான உலக சாம்பியன் டி.குகேஷ், ஆர்.பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, அரவிந்த் சிதம்பரம் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். நெதர்லாந்து செஸ் தொடரின் கடைசி சுற்று ஞாயிறன்று நள்ளிரவில் (இந்திய நேரம்) நிறைவு பெற உள்ள நிலையில், சறுக்கலில் உள்ள இந்திய வீரர்கள் கடைசி சுற்றில் முன்னேற்றம் கண்டு சாதிப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
