தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள 26 கட்சிகளுன் திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் 5 கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை நிறைவு பெற்றுள்ளது.
ஏற்கனவே, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும், காங்கிரஸுக்கு 28 தொகுதிகளும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு 4 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இன்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.