ஆர்.டி.ஐ மூலம் பொதுத்தேர்வு விடைத்தாள் நகல்களை பெறலாம் என மாநில தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.
2023இல் நடைபெற்ற 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை கேட்டு மாணவி ஒருவர் அரசு தேர்வுகள் இயக்ககத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாணவி மாநில தகவல் ஆணையரிடம் மாணவி மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த விசாரணையின்போது, பத்து மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள், பொதுத்தேர்வு விடைத்தாள்களின் நகல்களை தகவல் அறியும் உரிமைச் (RTI) சட்டத்தின் கீழ் விண்ணப்பித்துப் பெறலாம் என மாநில தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது. வினாத்தாள் பக்கத்திற்கு ரூ.2 வீதம் கட்டணம் செலுத்தி நகல்களைப் பெறலாம் எனவும் தெரிவித்துள்ளது.
