games

img

விளையாட்டு

மகளிர் ஐரோப்பிய கோப்பை கால்பந்து 8 முறை சாம்பியனான ஜெர்மனிக்கு செக் வைத்த ஸ்பெயின்

சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் 14ஆவது சீசன் மகளிர் ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை அன்று நள்ளிரவில் நடைபெற்ற 2ஆவது அரையிறுதி ஆட்டத்தில் 8 முறை சாம்பியனான ஜெர்மனியும், ஸ்பெயின் அணிகளும் மோதின. தொடக்கம் முதலே இரு அணி வீராங்கனைகளும் கோலடிக்க மல்லுக்கட்டின. இதனால் ஆட்டத்தின் ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பாக நகர்ந்தன.  ஆனாலும் ஆட்டநேர முடிவில் (90 நிமிடம்) இரு அணிகளும் கோலடிக்கவில்லை. இதனால் கூடுதல் நேரம்  கடைபிடிக்கப்பட்டது. கூடுதல் நேரத்தின் கடைசி நிமிடத்தில்,  அதாவது 113ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் வீராங்கனை அய்டானா பொன்மாட்டி கோலடித்தார். இதுவே ஆட்டத்தின் வெற்றி கோலாக அமைந்தது. 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற, ஸ்பெயின் அணி மகளிர் ஐரோப்பிய கோப்பை கால்பந்து வரலாற்றில் முதன்முறையாக முன்னேறி வரலாறு படைத்தது. 10ஆவது முறையாக இறுதிக்கு முன்னேறி, 9ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கிய ஜெர்மனி அணி பரிதாபமாக வெளியேறியது. முன்னதாக புதன்கிழமை அதிகாலை நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலி அணியை 2-1 என்ற  கோல் கணக்கில் வீழ்த்தி, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி இறுதிக்கு முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

சனிக்கிழமை இறுதி ஆட்டம்

மகளிர் ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்து, ஸ்பெயின் அணி இறுதிக்கு முன்னே றிய நிலையில், சனிக்கிழமை அன்று (ஜூலை 26) இரவு 9:30 மணிக்கு இறுதி ஆட்டம் நடைபெறுகிறது. இந்த  ஆட்டம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜேக்கப் மைதானத்தில் நடைபெற உள்ளது.

கால் விரல் எலும்பு முறிவு இங்கிலாந்து தொடரில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்

இந்தியா - இங்கிலாந்துக்கு எதி ரான 4ஆவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் நகரில் புதன் கிழமை அன்று தொடங்கியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் துணை கேப்டனும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சா ளர் கிறிஸ் வோக்ஸின் பந்துவீச்சில் காய மடைந்தார். காலில் ரத்தம் சொட்ட, சொட்ட மைதான பாதுகாப்பு வண்டியில் ரிஷப் பண்ட் பெவிலியன் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேற்கொள்ள ப்பட்ட மருத்துவ சிகிச்சை முடிவில் ரிஷப் பண்டின் கால் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது. இந்நிலையில், காயம் காரணமாக ரிஷப் பண்ட் இங்கிலாந்து தொடரில் இருந்து விலகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிசிசிஐ வட்டாரங்கள் கூறியதாக பிடிஐ வெளியிட்டுள்ள செய்தியில், “காயம் காரணமாக அடுத்த ஆறு வாரங் களுக்கு ரிஷப் பண்ட் விளையாட மாட்டார். அவருக்கு மாற்று வீரராக இஷான் கிஷானாக இருக்கலாம்” என செய்திகள் வெளியாகியுள்ளது. 

ரிஷப் பண்ட் மீது தான் தவறு

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்து மிதமான வேகத்தில் தான் வந்தது. ஆனால்  பண்ட் தவறான கண்டிப்புடன் ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய (திருப்ப) முயன்றார். இதனால் தான் பந்து யார்க்கராக நேரடியாக பண்டின் வலது காலில் தாக்கியது. பந்தை நேராக (ஸ்ட்ரெயிட்) திருப்பி இருந்தால், பண்டிற்கு காயம் ஏற்பட்டு இருக்காது. 2 பேர் உள்ளனர் : பண்ட் காயம் காரணமாக வெளியேறினாலும் ஆடும் லெவனில் கே.எல்.ராகுலும், பெஞ்சில் துருவ் ஜூரலும் உள்ளனர். அதனால் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பணிக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.