games

img

விளையாட்டு

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிக்கு முன்னேறுமா இந்தியா?

13ஆவது சீசன் மக ளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்  கட்டத்தை எட்டியுள்ள நிலை யில், தற்போது அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வியாழக்கிழமை அன்று நடைபெறும் 2ஆவது அரை யிறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன  7 முறை சாம்பியனான (1978, 1982, 1988, 1997, 2005, 2013, 2022) ஆஸ்திரேலிய அணி, 10ஆவது முறையாக இறுதிக்கு முன்னேறும் முனைப்பில் களம் காண்கிறது. அதே போல 3ஆவது முறையாக இறுதிக்கு முன்னேறி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் இந்திய அணி  களமிறங்குகிறது.  இந்தியா - ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் இறுதிக்கு முன்னேற தீவிர  பயிற்சியுடன் களமிறங்குகிறது என்ப தால், 2ஆவது அரையிறுதி ஆட்டம் மிக பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்க ப்படுகிறது.  இந்திய அணி 2005ஆம் ஆண்டு இறுதி வரை முன்னேறி ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை பறிகொடுத்தது. அதே போல 2017ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியிடம் தோல்வியைச் சந்தித்து கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணிக்கு வாய்ப்பு எப்படி?  

இந்திய மகளிர் அணி இறுதிக்கு முன்னேறும் என உறுதியாக சொல்ல முடியாது. காரணம் ஆஸ்திரேலியா வலுவான சாம்பியன் அணியாகும். எப்பொழுதும் போல அந்த அணி வீராங்கனைகள் பலம் மற்றும் சூப்பர் பார்மில் உள்ளனர். ஆஸ்திரேலிய ஆடவர் அணியைப் போல, சூழ்நிலைக்கு ஏற்ப ஆட்டத்திறனை வெளிப்படுத்தும் திறனில் அந்நாட்டு வீராங்கனைகள் உள்ளனர். நடப்பு சீசன் உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் கூட இந்திய அணியை ஆஸ்திரேலியா வீழ்த்தியுள்ளது. அதனால் இந்திய வீராங்கனைகள் மிகுந்த முயற்சி மற்றும் சீரிய கவனத்துடன் விளையாடினால் மட்டுமே இறுதிப் போட்டி பற்றி யோசிக்க முடியும்  என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடம் : நவி மும்பை, மகாராஷ்டிரா  நேரம் : மதியம் 3:00 மணி (புதன்)

இரண்டு ஆட்டங்களும் ; ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி) இனி இந்தியாவில் மட்டுமே ஆட்டங்கள்

நாகமுராவை வீழ்த்திய குகேஷ் : மகிழ்ச்சி அளிக்கும் பதிலடி

இந்தியா மற்றும் அமெரிக்கா வீரர்களுக்கு இடையேயான ‘செக்மேட்’ கண்காட்சி செஸ் போட்டி அமெரிக்காவில் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த போட்டியில் நடப்பு உலக செஸ் சாம்பியனான இந்தியாவை சேர்ந்த டி.குகேஷை, உலக தரவரிசையில் 2ஆம் இடத்தில் உள்ள அமெரிக்காவின் ஹிகாரு நாகமுரா 5-0 என்ற கணக்கில் தோற்கடித்தார். இந்த வெற்றியின் மூலம் கொண்டாட்டத்தில் திளைத்த ஹிகாரு நாகமுரா, குகேஷின் செஸ் போர்டில் இருந்த “ராஜா” காயை எடுத்து ரசிகர்களை நோக்கி ஆவேசமாகத் தூக்கி எறிந்தார்.  இப்படி ஒரு கொண்டாட்டம் செஸ் உலகிற்கு புதிது என்பதால் ஹிகாரு நகமுராவின் செயல் விளையாட்டு உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்நிலையில், அமெரிக்கா வீரர் ஹிகாரு நாகமுராவை மீண்டும் எதிர்கொண்ட குகேஷ், அவரை வீழ்த்திய பிறகு செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.  அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடைபெற்ற கிளட்ச் செஸ் என்ற ரேபிட் செஸ் போட்டியில், குகேஷ் மீண்டும் நாகமுராவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் கருப்புக் காய்களுடன் விளையாடிய குகேஷ், அவரை வீழ்த்தி அட்டகாசமான வெற்றியைப் பதிவு செய்தார். நாகமுரா தோல்வியை ஒப்புக்கொண்டு கைகுலுக்க எழுந்தபோது தன்னை அசிங்கப்படுத்திய அவருக்கு குகேஷ் என்ன பதிலடி கொடுக்க போகிறார்? என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.  ஆனால் நாகமுரா எழுந்து சென்ற பிறகு குகேஷ் மிகவும் அமைதியாகவும், கனிவுடனும் செஸ் போர்டில் இருந்த அனைத்துக் காய்களையும் நிதானமாகப் பழையபடி வரிசைப்படுத்தினார். அதாவது ஒவ்வொரு காயையும் அதற்குரிய இடத்தில் அவர் பொறுமையாக வைத்தார். நாகமுரா தனக்கு செய்தது போல, பதிலுக்கு எந்தவித நாடகத்தனமான செயலையும் செய்யாத குகேஷ், மிகவும் அமைதியாக நடந்து கொண்டது போட்டியை நேரில் பார்த்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.  நெட்டிசன்கள் பாராட்டு  தன்னை அசிங்கப்படுத்திய அமெரிக்கா வீரருக்கு குகேஷ் தனது அன்பின் மூலமும், அமைதியின் மூலமும் பதிலடி கொடுத்து விட்டார் என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். குகேஷின் அமைதியான குணம் எந்தவொரு கொண்டாட்டத்தையும் விட சக்தி வாய்ந்தது. அவர் எல்லா வகையிலும் ஒரு உண்மையான சாம்பியன் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.