games

img

விளையாட்டு

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வெல்லுமா தில்லி?

இந்தியாவில் ஆடவருக்கு ஐபிஎல் தொடர் நடத்து வதை போன்று, மகளிருக்கு  டபிள்யு.பி.எல் (WPL)  என்ற பெயரில் டி-20 தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.  இந்த டபிள்யு.பி.எல் தொடரின் 4ஆவது சீசன் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வியாழனன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பெங்களூரு - தில்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டபிள்யு.பி.எல்  வரலாற்றில் இதுவரை 4 தொடர்கள் (நடப்பு தொடரையும் சேர்த்து) நடைபெற்று உள்ளன. இந்த 4 தொடரிலும் தில்லி  அணி இறுதிக்கு முன்னேறியது. ஆனால் 3 தொடரிலும் கோப்பையை வெல்ல முடியாமல் சொதப்பியது. இந்நிலை யில், வியாழனன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி, தில்லி அணி முதல்முறை யாக சாம்பியன் பட்டம் வெல்லுமா? என ரசிகர்கள் ஆவலுடன் இந்த ஆட்டத்தை எதிர்பார்த்து உள்ளனர். இதுவரை சாம்பியன்கள் :  சீசன் 1 (2023): மும்பை - சீசன் 2 (2024): பெங்களூரு சீசன் 3 (2025): மும்பை

தில்லி - பெங்களூரு

நேரம்: இரவு 7:30 மணி இடம்: பி.சி.ஏ மைதானம், வதோரா (குஜராத்). சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி).

மிரட்டும் காற்று மாசு தில்லியில் சிக்கலின்றி உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறுமா?

10ஆவது சீசன் டி-20 உலகக் கோப்பை இந்தியா, இலங்கை நாடுகளில் கூட்டாக நடை பெறுகிறது. இதில் இந்தியாவில் சென்னை, அகமதாபாத், தில்லி, மும்பை, கொல்கத்தா என 5 மைதா னங்களிலும், இலங்கையில் கொழும்பு (2 மைதானங்கள்), கண்டி என 3 மைதானங்களிலும் நடைபெறுகிறது. ஆனால் 7 உலகக்கோப்பை போட்டிகளை நடத்தவிருக்கும் தில்லியில் தீவிர காற்று மாசு நிலவி வரு கிறது. தற்போது காற்றின் தரம் (AQI)  300க்கு மேல் உள்ளது. உலகக் கோப்பை தொடங்க இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், தில்லி யில் சிக்கலின்றி உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறுமா? என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.  டி-20 உலகக்கோப்பை இரவில் தான் நடைபெறுகிறது ; உள்ளரங்க போட்டிகள் இல்லையென்பதால் தில்லியில் நிலவும் காற்று மாசுபாடு போட்டியை கடுமையாக பாதிக்கும். கிரிக்கெட் ஓடி விளையாடும் போட்டி என்பதால், காற்று மாசு வீரர்களுக்கு சுவாசிப்பதில் சிரமம், கண் எரிச்சலை ஏற்படுத்தலாம். மூச்சு வாங்கும் சூழல் கூட ஏற்படலாம்.  குறிப்பாக வீரர்களின் ஆற்றல் குறையவும் வாய்ப்புள்ளது. கடந்த 2017இல் இலங்கை அணிக்கு எதிரான போட்டி ஒன்றில் வீரர்கள் (இலங்கை வீரர்கள் மட்டும் - இந்தியா விற்கு எதிரான டெஸ்ட் போட்டியில்) முகக்கவசம் அணிந்து விளையாடிய நிகழ்வுகளும் அரங்கேறியது உண்டு. அதே போல டி-20 உலகக்கோப்பை தொடரில் நிகழலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. காற்று மாசு கார ணமாக இந்திய வீரர்கள் முகக்கவசம் அணிந்து விளையாட ஒப்புக் கொண்டாலும், வெளிநாட்டு அணிகள் ஒப்புக்கொள்ளுமா? என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது. ரசிகர்கள் அதே போல ரசிகர்களின் வருகை யிலும் பாதிப்பு ஏற்படும். காற்று  மாசுபாடு அதிகமாக இருக்கும் போது, திறந்தவெளி மைதானங் களுக்குச் செல்வதை மக்கள் தவிர்ப் பார்கள். வெளிநாட்டு ரசிகர்கள் மைதா னத்திற்கு வருவார்களா? என்பது கூட சந்தேகம் தான். இதனால் டிக்கெட் விற்பனை மற்றும் மைதானத்தின் உற்சாகத்திலும் காற்று மாசு சிக்கலை ஏற்படுத்தலாம். பிட்ச் இரவு நேரத்தில் போட்டி நடைபெறு வதால் காற்று மாசுபாட்டுடன் பனிப் பொழிவு சேர்ந்தால், பந்து வீச்சா ளர்களுக்கு பந்தை கையாளுவது கடினமாகும். இது ஆட்டத்தின் முடிவை ஒருதலைப்பட்சமாகவும் மாற்ற வாய்ப்புள்ளது. மொத்தத்தில் காற்று மாசு காரணமாக தில்லி யில் நடக்கவிருக்கும் 7 உலகக் கோப்பை ஆட்டங்கள் எவ்வாறு நடை பெறுகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தடுக்க நடவடிக்கை உண்டா? காற்று மாசைக் குறைக்க மைதானத்தைச் சுற்றி வானில் நீர் தெளிப்பான்களைப் பயன்படுத்துதல், மாசுபாட்டைக் குறைக்க தற்காலிகக் கட்டுப்பாடுகளை விதித்தல் அல்லது போட்டியை வேறு இடத்திற்கு மாற்றினால் மட்டுமே உலகக்கோப்பை யை சுவாரஸ்ய நடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.