நிறைவடைந்தது பாரா ஒலிம்பிக் கடைசி நாளிலும் இந்தியா தங்கம், வெண்கலம் வென்று அசத்தல்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த ஆகஸ்ட் 29 அன்று 17 ஆவது சீசன் பாரா ஒலிம்பிக் தொடர் தொடங்கியது. 11 நாட்கள் விறுவிறுப் பாக நடைபெற்ற இந்த தொடர் ஞாயி றன்று நிறைவு பெற்றது. ஞாயிறன்று அதிகாலை நடைபெற்ற ஆடவர் ஈட்டி எறிதல் (எப் - 41) பிரிவில் இந்திய வீரர் நவதீப் சிங் 47.32 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஈரானைச் சேர்ந்த பெயிட் 47.64 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து தங்கம் வென்ற நிலையில், சீன வீரர் சன் (44.72 மீட்டர்) வெண்கலம் வென்றார். தகுதி நீக்கம் முதலிடம் பிடித்த வெற்றியை கொண் டாடும் பொழுது ஈரான் வீரர் பெயிட் சொந்த நாட்டின் கொடிக்கு பதிலாக வேறொரு அமைப்பு அல்லது குழு சார்ந்த கொடியை கையில் ஏந்தி கொண்டாடினர். இது விதிமுறைக்கு எதிரானது என்ற நிலையில், ஈரான் வீரர் பெயிட் தகுதி நீக்கம் செய்யப்படார். வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நவதீப்புக்கு தங்கப்பதக்கமும், வெண்கலப்பதக்கம் வென்ற சீன வீரர் சென்னுக்கு வெள்ளிப்பதக்கமும், 4ஆவது இடம் பிடித்த ஈராக் வீரர் வில்டனுக்கு வெண்கலப்பதக்கம் வழங்கப்படுவதாக பாரீஸ் ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது. அதிர்ஷ்ட வாய்ப்பு டன் இந்திய வீரர் நவதீப் தங்கப்பதக் கம் வென்ற நிலையில், இதன்மூலம் இந்தியாவின் தங்கப்பதக்க பதக்க எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.
வெண்கலம் வென்றார் சிம்ரன்
மகளிர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் (பார்வை குறைபாடு - டி 12) இந்திய வீராங்கனை சிம்ரன் பந்தைய தூரத்தை 24.75 வினாடிகளில் கடந்து வெண்கலப்பதக்கம் வென்றார். இந்த பிரிவில் கியூபா வீராங்கனை துராந்த் (23.62 வினாடி) தங்கப்பதக்கமும், வெனிசுலா வீராங்கனை (24.19 வினாடி) பிரேஜ் வெள்ளிப்பதக்கமும் வென்றனர். சிம்ரனின் வெண்கலப்பதக்கம் மூலம் இந்தியாவின் மொத்த எண்ணிக்கை 29 ஆக (7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம்) உயர்ந்தது. (மாலை 5 மணி நிலவரம்)
அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2024 சபலென்கா சாம்பியன்
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி களில் ஒன்றான அமெரிக்க ஓபன் தொடரின் 144 ஆவது சீசன் திங்களன்று அதிகாலை (ஆடவர் ஒற்றை யர் பிரிவுடன்) நிறைவு பெற்ற நிலையில், ஞாயிறன்று அதிகாலை நடை பெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் உலகத்தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள பெலாரசின் சபலென்கா, தரவரிசை யில் 6ஆவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பெகுலாவை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சபலென்கா 7-5, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்ற நிலையில், சபலென்கா வெல்லும் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். சாம்பியன் பட்டம் வென்ற சபலென்காவுக்கு கோப்பையுடன் இந்திய மதிப்பில் 30 கோடியே 23 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. அதே போல இரண்டாவது இடம் பிடித்த உள்ளூர் வீராங்கனை பெகுலாவுக்கு 15 கோடியே 11 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.
சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்தார் மொயின் அலி
சுழற்பந்து வீச்சு, அதி ரடி பேட்டிங் திறமை யுடன் கடந்த 2014 பிப்ரவரி மாதம் அன்று மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் மூலம் சர்வ தேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து நாட்டிற்காக காலடி வைத்தார் மொயின் அலி. தனது சிறப்பான ஆட்டத் தின் மூலம் டி-20 மற்றும் டெஸ்ட் போட் டிகளில் இடம்பிடித்த மொயின் அலி, சுழற்பந்து வீச்சுடன் அதிரடி பேட்டிங்கிலும் ருத்ர தாண்டவம் ஆடினார். இதனால் உலகின் முன்னணி ஆல்ரவுண்டர் களில் ஒருவராக மொயின் அலி வர்ணிக்கப்பட்ட நிலையில், ஐபிஎல் தொடரின் நட்சத்திர அணியான சென்னை அணியி லும் ஆல்ரவுண்டராக ஜொலித் தார். இந்நிலையில் அடுத்த வாரம் தொடங்க இருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கெ திரான தொடரில் இடம் கிடைக் கும் என மொயின் அலி எதிர் பார்த்து இருந்தார். ஆனால் அவ ருக்கு வாய்ப்பளிக்க இங்கி லாந்து கிரிக்கெட் வாரியம் மறு த்த நிலையில், ஞாயிறன்று சர்வ தேச கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக மொ யின் அலி அறிவித்தார். மொயின் அலி 68 டெஸ்ட் (3,094 ரன்கள் - 204 விக்கெட்டு கள்), 138 ஒரு நாள் (2,355 ரன்கள் - 111 விக்கெட்டுகள்), 92 டி-20 (1,229 ரன்கள் - 51 விக்கெட்டு கள்) போட்டிகளில் விளையாடி யுள்ள நிலையில், சுழற்பந்து வீச்சு மற்றும் அதிரடி பேட்டிங் மூலம் இக்கட்டான சூழ லில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.