games

img

விளையாட்டு...

‘ஒயிட் வாஷ்’ வெட்கக்கேடானது இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் கடும் கண்டனம்

3 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க நியூஸி லாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 3  போட்டிகளிலும் தோல்வியை தழுவி, 147 ஆண்டுகால வரலாற்றில் முதன் முறையாக டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் ஆனது இந்திய அணி. இந்திய அணியின் இந்த வரலாற்றுத் தோல்வி க்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரி வித்து வரும் நிலையில், மூத்த வீரர் களும் இந்திய அணியை கடுமை யாகச் சாடியுள்ளனர். சச்சின் “இந்திய அணியின் ஒயிட்வாஷ் தோல்வியை ஜீரணிக்கக் கடினமாக இருக்கிறது. இந்தத் தோல்வி ஆலோ சிக்கப்பட்டு, சுய பரிசோதனை செய்யப்பட வேண்டும். டெஸ்ட் தொட ருக்குச் சரியாகத் தயாராகவில்லையா, மோசமான ஷாட்கள் தேர்வா? இல்லை, போதுமான பயிற்சி எடுக்க வில்லையா? என்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட வேண்டும்” என சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார். சேவாக் “சுழற்பந்துவீச்சுக்கு எதிராக ஆடும் இந்திய பேட்டர்களின் திறனை உறுதியாக மேம்படுத்த வேண்டும். அதற்கு அதிக பயிற்சிகள் வழங்க வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் தேவையில்லாத பரிசோதனைகள் மோசமான முடிவுகளை வழங்கி விட்டன” என சேவாக் கூறியுள்ளார். யுவராஜ் சிங் டி-20 உலகக் கோப்பையை வென்ற  அடுத்த சில மாதங்களில், சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ்  ஆகி இருக்கிறது. இதுதான் இந்த விளையாட்டின் அழகு. ஆஸ்திரேலிய தொடரில் பெரிய சோதனைகள் காத்தி ருக்கின்றன. இந்திய அணி சுய பரிசோத னை செய்து முன்னேறி செல்ல வேண்டும். இதுதான் சிறந்த வழி” என யுவராஜ் சிங் கூறியுள்ளார். ஹர்பஜன் சிங் “பந்து திரும்பக்கூடிய ஆடுகளம், அதுவே நமக்குச் சொந்த எதிரியாக மாறிவிட்டது. தரமான சுழற்பந்துவீச்சு ஆடுகளத்தில் இந்திய அணி விளை யாடி பயிற்சி எடுப்பது அவசியம் என தொடர்ந்து கூறிவருகிறோம். இது போன்ற டர்னிங் பிட்ச்கள் (பந்து திரும்பக் கூடியது) ஒவ்வொரு பேட்ட ரையும் சாதாரணமாக மாற்றிவிட்டது” என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இர்பான் பதான் “உள்நாட்டில் இந்திய அணியின் இந்த ஒயிட் வாஷ் வெட்கக்கேடாக இருக்கிறது” என முன்னாள் ஆல்ரவு ண்டர் இர்பான் பதான் வேதனை தெரிவித்துள்ளார்.

ஸ்போர்ட்ஸ் சிங்கிள்ஸ்

கடும் கோபத்தில் அஜித் அகார்கார் மும்பை வான்கடே மைதானத்தில் டெஸ்ட் போட்டி நிறைவு பெற்றப் பின்பு பிசிசிஐ தலைமை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் இந்திய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயருடன் கோவமாக,”இதெல்லாம் எப்படி நிகழ்ந்தது?” என கேள்வி எழுப்பியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சஹா ஓய்வு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவ தாக இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா  அறிவித்துள்ளார். சஹா 40 டெஸ்ட், 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடி யுள்ளார். சவூதியில் ஐபிஎல் ஏலம்? 2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் சவூதி அரேபியா நாட்டின் தலைநகர் ரியாத்தில் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரோகித், கோலி தான் காரணமாம் இந்திய அணி ஒயிட் வாஷ் ஆனதற்கு மூத்த வீரர்கள் ரோகித், கோலி தான் காரணம் என தோல்வியை திசை திருப்ப இந்திய கிரிக்கெட்  கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புரோ கபடி 2024

ஜெய்ப்பூர் - உ.பி., யோதாஸ்
நேரம் : இரவு 8 மணி

மும்பை - தில்லி
நேரம் : இரவு 9 மணி

இரண்டு ஆட்டங்களும்: கச்சிபலி, ஹைதராபாத்