games

img

விளையாட்டு...

பாரா ஒலிம்பிக் 2024

இந்தியாவிற்கு மேலும் வெண்கலம்

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் 17ஆவது சீசன் பாரா ஒலிம்பிக் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சனியன்று அதி காலை நடைபெற்ற ஆடவர் குண்டு எறிதல் பிரிவில் (எப் - 57) இந்திய வீரர் கோகடோ செமா 14.65 மீட்டர் தூரம் குண்டு எறிந்து வெண்கலம் வென்றார். ஈரான் வீரர் யாசின் 15.96 மீட்டர் தூரம் குண்டை எறிந்து தங்கப்பதக்கமும், பிரேசில் வீரர் பவுலினா 15.06 மீட்டர் குண்டை எறிந்து வெள்ளிப்பதக்கமும் வென்றனர். ராணுவத்தில் காயமடைந்தவர்... இந்தியா சார்பில் வெண்கலப்பதக்கம் வென்ற கோகடோ செமா நாகாலாந்து மாநிலம் திம்மபூர் பகுதியைச் சேர்ந்தவர். இந்திய ராணுவத்தில் பணியாற்றிய பொழுது, கடந்த 2002இல் ஜம்மு-காஷ்மீரின் சவுக்கிபால் பகுதியில் பணியில் ஈடுபட்ட போது கண்ணிவெடி வெடித்ததில் தனது இடது காலை செமா இழந்தார். இருப்பினும் நம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு பாரா ஒலிம்பிக்ஸ் விளையாட்டில் வெண் கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். சனியன்று மாலை நிலவரப்படி இந்தியா பதக்கப் பட்டியலில் 6 தங்கம், 9 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களை வென்று பட்டியலில் 18வது இடத்தில் இருந்தது.

இன்று நிறைவு பெறுகிறது பாரா ஒலிம்பிக்

பாரீஸ் பாரா ஒலிம்பிக் தொடர் இந்திய நேரப்படி ஞாயிறன்று நிறைவுபெறுகிறது. தொடர்ந்து திங்களன்று நிறைவு விழா நடைபெறும் நிலையில், நிறைவு விழாவில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங், ப்ரீத்தி பால் ஆகியோர் இந்திய தேசியக் கொடியை கையில் ஏந்தி நாடுகளின் அணிவகுப்பில் பங்கேற்கின்றனர்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2024 இறுதியில் சின்னர், பிரிட்ஜ்

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி களில் ஒன்றான அமெரிக்க ஓபன் தொடரின் 144ஆவது சீசன் நியூயார்க் நகரில் ஆகஸ்ட் 26 அன்று தொடங்கிய நிலையில், தற்போது இந்த தொடர் இறு திக்கட்டத்தை எட்டியுள் ளன. இந்திய நேரப்படி சனியன்று அதிகாலை நடை பெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு முதலாவது அரையி றுதி ஆட்டத்தில் உலகத்தர வரிசையில் முதலிடத்தில் உள்ள இத்தாலியின் சின்னர், தரவரிசையில் 23ஆவது இடத்தில் உள்ள பிரிட்ட னின் டிராப்பரை எதிர் கொண்டார். தனது வழக்க மான அதிரடி மூலம் தொடக் கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சின்னர் 7-5, 7-6 (7-3), 6-2 என்ற செட் கணக் கில் வெற்றி பெற்று முதல் முறையாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இறுதிக்கு முன்னேறினார்.  தொடர்ந்து நடை பெற்ற இரண்டாவது அரை யிறுதி ஆட்டத்தில் தரவரிசை யில் 12ஆவது இடத்தில் அமெரிக்காவின் பிரிட்ஜ், தரவரிசையில் 20ஆவது இடத்தில் உள்ள அமெரிக்கா வின் தியாபோவை எதிர் கொண்டார். இருவரின் அதி ரடி ஷாட்களை வெளிப் படுத்தியதால், ஆட்டத்தின் ஒவ்வொரு நிமிடமும் அனல் பறந்தது. இறுதி யில் 4-6, 7-5, 4-6, 6-4, 6-1 என்ற செட்களில் கடும் போராட்டத்துடன் பிரிட்ஜ் வெற்றி பெற்றார். இதன் மூலம் அமெரிக்காவின் பிரிட்ஜ் தனது கிரண்ட்ஸ்லாம் வரலாற்றிலேயே முதன் முறையாக இறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில், அதிரடிக்கு பெயர் பெற்ற தியாபோ அதிர்ச்சி தோல்வி யுடன் தொடரில் இருந்து வெளியேறினார்.  சின்னர் - பிரிட்ஜ் மோதும் இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி ஞாயிறன்று அதிகாலை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.