ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டி20 ஆட்டத்தில் இலங்கை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. முதல் 4 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 4-0 என டி20 தொடரை வென்றது. 5வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று மெல்போர்னில் நடந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 154 ரன்கள் அடித்தது. ஆஸ்திரேலிய அணியில் ஆடிய மேத்யூ வேட் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார். அதனை தொடர்ந்து மேத்யூ வேட் 27 பந்தில் 43 ரன்கள் எடுத்தார். மேக்ஸ்வெல் 29 ரன்களும், ஜோஷ் இங்லிஸ் 23 ரன்களும் எடுத்தனர்.
155 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கைக்கு தொடக்க ஆட்டக்காரர் குசால் மெண்டிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 71 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறிய இலங்கைக்கு மெண்டிஸ், கேப்டன் தசுன் ஷனாகா ஜோடி சேர்ந்தனர். ஷனாகா 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மெண்டிஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்து 58 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார்.
19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்த இலங்கை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.