சென்னை அணியில் சஞ்சு சாம்சன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது
உலகின் முதன்மையான உள்ளூர் டி-20 தொட ரான, ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் 19ஆவது சீசனுக் கான வீரர்களின் மினி ஏலம் டிசம்பர் 16ஆம் தேதி அபுதாபியில் நடைபெறு கிறது. இதற்கு முன்னதாக தக்க வைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை 10 அணிகளும் ஐபிஎல் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றன. அதற்கு முன்பாக பரஸ்பர பேச்சு வார்த்தையின் மூலம் வீரர்கள் வர்த்தக பரிமாற்றம் (டிரேட்) முறையும் நடை பெற்று வருகிறது. இந்நிலையில், ராஜஸ்தான் அணி யின் கேப்டனும், சிறந்த வளரும் வீர ரான விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனை (ரூ. 18 கோடி - கேரள வீரர்) சென்னை அணி பரிமாற்றம் முறையில் வாங்கி உள்ளது. இதற்கு ஈடாக 14 ஆண்டுகள் விளையாடி வரும் ரவீந்திர ஜடேஜா, சாம் கரணை ராஜஸ்தான் அணிக்கு பரிமாற்றம் செய்துள்ளது சென்னை அணி நிர்வாகம். வரவேற்பும், சோகமும் 14 ஆண்டுகள் ; 200 போட்டிகள் ; 2,354 ரன்கள் ; 150 விக்கெட்டுகள் என சென்னை அணிக்காக கடுமையாக உழைத்த ஜடேஜா ராஜஸ்தான் அணி க்கு பரிமாற்றம் செய்யப்பட்டது ரசிகர்க ளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. இதனால் சமூக வலைதளங்க ளில் சோகமான பதிவுகளுடன் சென்னை ரசிகர்கள் ஜடேஜாவிற்கு பிரியாவிடை அளித்து வருகின்றனர். அதே போல சென்னை ரசிகர்க ளால் சுட்டிக்குழந்தை என அழைக் கப்படும் இங்கிலாந்து வீரர் சாம் கர ணுக்கும் பிரியாவிடை மீம்ஸ் மூலம், “ராஜஸ்தான் அணியில் நன்றாக விளை யாட வேண்டும்” என வாழ்த்து தெரி வித்துள்ளனர். மறுபக்கம் சகோதர மாநி லத்தின் (கேரளம்) வீரரே சென்னை அணிக்கு வருக! என சஞ்சு சாம்சனு க்கு சென்னை ரசிகர்கள் சமூக வலை தளங்களில் பிரம்மாண்ட வரவேற்பு அளித்து வருகின்றனர்.
கொல்கத்தா டெஸ்ட் இந்தியா 189; தென் ஆப்பிரிக்கா மீண்டும் திணறல்
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்கா அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் வெள்ளியன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்து முதலில் களமிறங்கியது. இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா (5 விக்.,) வேகத்தை சமாளிக்க முடியாமல் 55 ஓவர்களில் 159 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா சுருண்டது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியும் தென் ஆப்பிரிக்க இளம் வீரர் சைமன் ஹார்மர் (4 விக்.,) பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 62.2 ஓவர்களில் 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் கே.எல்.ராகுல் (39) மட்டுமே 30 ரன்களுக்கு மேல் குவித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். 30 ரன்கள் பின்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியின் சுழலில் (ஜடேஜா - 4, குல்தீப் - 2, அக்சர் - 1) கடுமையாக திணறியது. 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 35 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் குவித்து, 63 ரன்கள் முன்னிலையில் உள்ளது. ஜேன்சன் (13), கார்பின் (1) களத்தில் உள்ளனர். ஞாயிறன்று தொடர்ந்து 3ஆம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
