games

img

டி20 உலகக்கோப்பை - 111 மீட்டருக்கு சிக்ஸரை பறக்கவிட்ட ரஸல்  

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகள் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்புகள் 157 ரன்கள் எடுத்துள்ளது.  

டி20 உலகக்கோப்பை குரூப் 1 பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் அணிகள் சூப்பர் 12 சுற்றில் தங்களது கடைசி ஆட்டத்தில் விளையாடி வருகின்றன. இதில் விளையாடிய ஆண்ட்ரே ரஸல் கடைசி 2 பந்துகளை சிக்ஸருக்கு அனுப்பி அதிரடியுடன் இன்னிங்ஸை முடித்தார். 19.5வது பந்தில் அவர் அடித்த சிக்ஸர் 111 மீட்டர் தூரம் சென்றது குறிப்பிடத்தக்கது.  நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட்டுகள் இழப்புகள் 157 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய தரப்பில் ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஆடம் ஸாம்பா ஆகியார் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.