மோதல் இல்லாமல் நகரும் புரோ கபடி
கபடி விளையாட்டு என்றால் முதலில் ஞாபகத்துக்கு வருவது சண்டை மட்டுமே. காரணம் கபடி விளை யாட்டில் மோதல் தான் அடிப்படை நிகழ்வு ஆகும். கிராமத்தில் நடைபெறும் போட்டியாக இருந்தாலும் சரி, சர்வதேச வீரர்கள் பங்கேற்கும் உலகக்கோப்பைத் தொடராக இருந்தாலும் சரி அடிதடி இல்லாமல் எந்த கபடி தொடர்களும் முடிந்தது கிடை யாது. இதே போல புரோ கபடி தொடரில் இதுவரை நடை பெற்ற 10 சீசன்களில் ஒரு சீசன் கூட மோதல் இல்லாமல் நடைபெற்றது இல்லை. ஆனால் தற்போது நடைபெற்று வரும் 11ஆவது சீசன் புரோ கபடி தொடர் நாடுகட்டத்தை தாண்டி யுள்ள நிலையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் புரோ கபடி தொடர் மோதல் போக்கு இல்லாமல் அமைதி யாக நடைபெற்று வருகிறது. 12 அணி வீரர்களும் தங்களு க்குள் நட்பு பாராட்டி விளையாடுவது பாராட்டுகளையும், நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.
புரோ கபடி 2024
இன்றைய ஆட்டங்கள்
இரண்டு ஆட்டங்களும் : கச்சிபலி, ஹைதராபாத்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் ஒடிடி
பெங்கால் - தில்லி
நேரம் : இரவு 8 மணி
ஹரியானா - குஜராத்
நேரம் : இரவு 9 மணி
பந்துவீச்சில் சர்ச்சை வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹாசனுக்கு சிக்கல்
கிரிக்கெட் உலகின் நட்சத்திர ஆல்ரவுண்டரும், வங்கதேச ஆடவர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான ஷாகிப் அல் ஹாசன் இங்கிலாந்து நாட்டின் முதல் தர போட்டியான (டெஸ்ட்) கவுன்டி தொடரில் விளையாடி வருகிறார். சர்ரே அணிக்காக விளையாடி வரும் ஷாகிப் அல் ஹாசன் சோமர்சட் அணிக்கெதிராக 2 இன்னிங்சிலும் மொத்தம் 63 ஓவர்கள் பந்துவீசினார். இந்நிலையில், ஷாகிப்பின் பந்துவீச்சு சர்ச்சைக்குரிய வகையில் இருப்பதாக போட்டி நடு வர்கள் ஸ்டீவ் ஓ ஷாக்னசி மற்றும் டேவிச் மில்னஸ் குற்றம் சாட்டியுள்ளனர். எனினும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை. ஆனால் அடுத்த சில வாரங்களில் அவர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார் என செய்திகள் வெளியாகியுள்ளன. இதுவரை 447 சர்வதேச போட்டிகளில் 712 விக்கெட்டுகளும், 71 டெஸ்டுகளில் 246 விக்கெட்டு களும் கைப்பற்றியுள்ள ஷாகிப், இதுவரை பலமுறை சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும் பந்துவீச்சு சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்போர்ட்ஸ் சிங்கிள்ஸ்
ரோகித் ஓய்வு பெற வேண்டுமாம்
“ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தால் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவது நல்லது. அவருக்கும் வயதாகி விட்டது” என முன்னாள் இந்திய கேப்டன் ஸ்ரீகாந்த் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த கருத்துக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவிற்கு பட்டம்
குத்துச்சண்டை போட்டிகளில் தொழிற்முறை குத்துச் சண்டை மற்றும் அமெச்சூர் குத்துச் சண்டை என இரண்டு வகையான போட்டிகள் இருக்கிறது. பொது வாக இந்திய வீரர்கள் அமெச்சூர் குத்துச்சண்டை போட்டிகளில் பயிற்சி பெற்று ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் போன்ற தொடரில் பங்கேற்பார்கள். ஆனால் முகமது அலி, மைக் டைசன் போன்ற நட்சத்திர வீரர்கள் மிரட்டிய தொழிற்முறை குத்துச்சண்டையில் இந்தியர்கள் அதிகம் பங்கேற்க மாட்டார்கள். இத்தகைய சூழலில் இந்திய குத்துச்சண்டை வீரர் மந்திப் ஜாங்கரா தொழில்முறை குத்துச்சண்டையில் மிரட்டி வருகிறார். கேமன் தீவில் நடைபெற்ற சூப்பர் வெதர்வைட் உலக சாம்பியன் பட்டத்திற்கான போட்டியில் பிரிட்டன் வீரர் கார்னர் மேக்கண்டசை மந்தீப் ஜங்ரா வீழ்த்தி பட்டம் வென்றுள்ளார்.