உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்று அர்ஜெண்டினாவிற்கு அதிர்ச்சி அளித்த பராகுவே
23ஆவது உலகக்கோப்பை கால் பந்து தொடர் வரும் 2026-ஆம் ஆண்டில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளில் கூட்டாக நடைபெறுகிறது. இந்த உலகக்கோப்பை தொட ருக்கான தென் அமெரிக்க நாடுகளின் தகுதி சுற்றில் அர்ஜெண்டினா - பராகுவே அணிகள் மோதின. இந்திய நேரப்படி வெள்ளியன்று அதிகாலை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நடப்பு உலகச் சாம்பியன் அர்ஜெண்டி னாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பராகுவே அணி அபார வெற்றி பெற்றது. நட்சத்திர வீரர் மெஸ்ஸி இருந்தும் பராகுவே அணிக்கெதிரான தகுதி சுற்று ஆட்டத்தில் தோல்வி கண்டு இருப்பது கால்பந்து உலகில் கடும் அதிர்ச்சி அலை யை ஏற்படுத்தியுள்ளது. உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தென் அமெரிக்க தகுதி சுற்றில் அர் ஜெண்டினா அணி 11 ஆட்டங்களில் விளையாடி 22 புள்ளிகளுடன் முத லிடத்தில் உள்ளது. அதனால் இந்த அதிர்ச்சி தோல்வி அர்ஜெண்டினா அணிக்கு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. கொலம்பியா, பிரேசில், உருகுவே, ஈகுவடார், பராகுவே ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தென் அமெரிக்க தகுதி சுற்றில் புள்ளிப்பட்டியலில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் பார்முக்கு திரும்புமா தமிழ் தலைவாஸ்? இன்று பெங்கால் அணியை எதிர்கொள்கிறது
11ஆவது சீசன் புரோ கபடி தொடரின் 2ஆம் கட்ட ஆட்டங்கள் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சனியன்று நடைபெறும் 57ஆவது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. தொடக்கம் முதலே சூப்பர் பார்மில் விளையாடி வந்த தமிழ் தலைவாஸ் அணி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த வாரம் முதலிடத்தில் தமிழ் தலைவாஸ் தற்போது 10ஆவது இடத்திற்கு கீழே இறங்கியுள்ளது. இத்தகைய சூழலில் பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்று மீண்டும் பார்முக்கு நுழையுமா? என தமிழ்நாடு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
இன்றைய ஆட்டங்கள்
இரண்டு ஆட்டங்களும்: நொய்டா மைதானம், உத்தரப்பிரதேசம்.
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் (ஓடிடி)
ரோகித் சர்மாவை ஓரம்கட்ட கம்பீர் திட்டம்?
ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம் தொடங்க உள்ளது. 5 போட்டி களைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்த வீரர் விளையாடு வார்கள், இந்த வீரர்கள் விளையாட மாட்டார்கள் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் நாள்தோறும் எதையாவது கூறி வருகிறார். குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா விளையாடாத பட்சத்தில் அணியின் தொடக்க ஆட்டக்காரராக கே.எல்.ராகுல் விளையாட வாய்ப்புள்ளது போல கடந்த வாரம் கம்பீர் செய்தி யாளர்கள் சந்திப்பில் கூறினார். ஆனால் ரோகித் சர்மா ஏன் விளையாட மாட்டார்? அவருக்கு என்ன காயமா? என எந்த காரணத்தையும் கம்பீர் வெளிப் படையாக கூறவில்லை. ஆனால் மூத்த வீரரும், டெஸ்ட் அணியின் கேப்டனு மான ரோகித் சர்மா அணியிலிருந்து ஓரம் கட்ட கம்பீர் பல்வேறு சித்துவிளை யாட்டில் ஈடுபட்டு வருகிறது மட்டும் தெளிவாக தெரிகிறது என்பது குறிப் பிடத்தக்கது.