எல்லாம் கம்பீரால் வந்த வினை - பார்டர் - கவாஸ்கர் தொடரில் தொடக்க ஆட்டத்திலேயே மோதல் ஏற்பட வாய்ப்பு
கிரிக்கெட் உலகில் பிரசித்திப் பெற்ற பார்டர் - கவாஸ்கர் தொடர் மிக விறுவிறுப்பாக நடை பெறும். இந்தியா - ஆஸ்தி ரேலிய அணிகள் மோதும் இந்த பார்டர் - கவாஸ்கர் தொடரின் நடப்பாண்டுக் கான சீசன் நவம்பர் 22ஆம் தேதி (5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட்) ஆஸ்தி ரேலியாவில் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சி யாளரும், பாஜக முன்னாள் எம்.பி.,யுமான கவுதம் கம்பீ ரின் சர்ச்சைக்குரிய பேச்சு களாலும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் பதிலடியாலும் இந்தியா - ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் தொடக்க ஆட்டத்திலிருந்தே பிரம்மா ண்ட அளவில் மோதல் சம்பவங்கள் அரங்கேற வாய்ப்புள்ளது. இந்திய வீரர்களின் பார்ம் தொடர்பாக பாண்டிங் விமர்சித்ததற்கு பதிலடி என்ற பெயரில் கம்பீர்” எங்கள் நாட்டு கிரிக்கெட் பற்றி பாண்டிங்கிற்கு என்ன கவலை. இந்திய அணி மற்றும் வீரர்களைப் பற்றி கவலைப்படாமல், அவர் ஆஸ்திரேலியா கிரிக்கெட் பற்றி சிந்திக்க வேண்டும்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். கம்பீரின் பேச்சிற்கு பாண்டிங், “கவுதம் கம்பீரிடம் இருந்து அப்படியொரு பதில் வரும் என்று நினைக்கவில்லை. ஆனால் கம்பீரின் குணத்தை கொஞ்சம் அறிவேன். கோபக் காரரான கம்பீர் அப்படி பதில் அளித்ததில் எந்த ஆச்ச ரியமும் இல்லை” எனக் கிண்டலாக கூறினார். 2011 ஒருநாள் உலகக் கோப்பை முதல் இந்தியா - ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஆகவே ஆகாது. கடந்த 13 ஆண்டுகளாக முட்டலும், மோதலுமாகவே விளை யாடி வருகின்றனர். இது வரை நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலிய வீரர்களின் மோதலுக்கு, ஆஸ்திரேலிய வீரர்கள் தான் காரணம். அவர்கள் வீரர்களை ஆட்ட மிழக்க ஸ்லெட்ஜிங் (வம்பு இழுத்தல்) முறையை பயன்படுத்துகின்றனர். ஸ்லெட்ஜிங் முறை காரணமாகவே இந்தியா - ஆஸ்திரேலிய வீரர்களுக்கு மைதானத்தில் வாக்கு வாதம் நிகழும். ஸ்லெட்ஜிங் இல்லை என்றால் சர்வ சாதாரணமாகவே இரு அணிகளும் விளையாடுவா ர்கள். ஆனால் இந்த முறை ஸ்லெட்ஜிங் முறை ஆரம்பிக் காமலேயே கம்பீரால் பார்டர் - கவாஸ்கர் தொடரில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜலஜ் சக்சேனாவிற்கு கேரள அரசு கவுரவம்
சமீபத்தில் ரஞ்சிக்கோப்பை வரலாற்றில் 6000 ரன்கள் மற்றும் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்த ஜலஜ் சக்சேனாவிற்கு 10 லட்சம் ரூபாய் வழங்கி கௌரவித்துள்ளது கேரள கிரிக்கெட் வாரியம்.
இன்றைய ஆட்டங்கள்
இரண்டு ஆட்டங்களும்: நொய்டா மைதானம், உத்தரப்பிரதேசம்.
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் (ஓடிடி)
டிரெண்டிங் வாய்ஸ்
“என் மகனின் (சஞ்சு சாம்சன்) 10 ஆண்டுகால வாழ்க்கையை 4 பேர் வீணடித்தார்கள். அந்த 4 பேர் கேப்டன்களான தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் ஆவர். 4 பேரும் எவ்வளவு காயப்படுத்தினார்களோ, அதை விட வலிமையான நெருக்கடியி லிருந்து வெளியே வந்துள்ளார் சஞ்சு” என இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், அதிரடி பேட்டருமான சஞ்சு சாம்சனின் தந்தை விஸ்வநாத் கூறினார்.