games

img

விளையாட்டு

தில்லி டெஸ்ட் போட்டி ஜெய்ஸ்வால் சதம் இந்தியா வலுவான தொடக்கம்

2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியா விற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றியை (140 ரன்கள் வித்தியாசத்தில்)  ருசித்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி தில்லியில் வெள்ளிக்கிழமை அன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் களமிறங்கி யது. மேற்கு இந்திய தீவுகள் பந்துவீச்சாளர்களின் வலுவான பந்துவீச்சை சமாளித்து கே.எல்.ராகுல் - ஜெய்ஸ்வால் ஜோடி சிறப்பான தொடக்கத்தை அளித்தது. கே.எல்.ராகுல் 38 ரன்களில் ஆட்டமிழக்க, தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் - ஜெய்ஸ்வால் ஜோடி தில்லி மைதானத்தில் நங்கூரம் அமைத்த னர். இருவரும் அரைசதமடித்த நிலையில், சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சாய் சுதர்சன் 87 ரன்களில் (165 பந்துகள் - 12 பவுண்டரி) ஆட்டமிழந்தார். மறுபக்கம் சிறப்பான  ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தினார். ஜெய்ஸ்வாலுக்கு இது 7ஆவது சதமாகும். முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 90 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 318 ரன்கள் குவித்தது.   ஜெய்ஸ்வால்(173), கில்(20) ஆகியோர் களத்தில் உள்ளனர். மேற்கு இந்தியத் தீவுகள் தரப்பில் வாரிக்கன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சனிக்கிழமை அன்று தொடர்ந்து 2ஆவது நாள் ஆட்டம் நடைபெறஉள்ளது.

​​​​​​வுஹான் ஓபன் டென்னிஸ் ரைபகினா அதிர்ச்சி தோல்வி ; கவுப் அபாரம்

சீனாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான வுஹானில் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வரு கிறது. மகளிருக்கு மட்டும் நடைபெற்று வரும் இந்த தொடரில் வெள்ளிக்கிழ மை அன்று ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் நடைபெற்றது. முதல் காலி றுதி ஆட்டத்தில், போட்டித் தரவரிசை யில் முதலிடத்தில் உள்ள பெலாரசின் சபலென்கா, போட்டித் தவரிசையில் 8ஆவது இடத்தில் உள்ள கஜகஸ்தா னின் ரைபகினாவை எதிர்கொண்டனர். தொடக்கம் முதலே சபலென்காவின் அதிரடியை தாக்குப்பிடிக்க முடியா மல் திணறிய ரைபகினா 3-6, 3-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியு டன் வெளியேறினார். எளிதான வெற்றி யுடன் சபலென்கா அரையிறுதிக்கு முன்னேறினார். கவுப் அதிரடி மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 3ஆவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் கோகா கவுப், தரவரிசையில் இல்லாத ஜெர்மனியின் லாவுராவை  6-3, 6-0 என்ற செட் கணக்கில் அதிரடி யாக வீழ்த்தி அரையிறுதிக்கு முன் னேறினார். போட்டித் தரவரிசையில் 6ஆவது இடத்தில் உள்ள அமெரி க்காவின் பெகுலா 2-6, 6-0, 6-3 என்ற செட் கணக்கில் தரவரிசையில் இல்லாத முன்னணி வீராங்கனையான செக்குடியரசின் சினியாகோவாவை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் : இன்றைய ஆட்டம் இங்கிலாந்து - இலங்கை இடம் : கொழும்பு, இலங்கை நேரம் : மதியம் 3:00 மணி சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)

புரோ கபடி 2025 : இன்றைய ஆட்டங்கள்

பெங்களூரு - ஜெய்ப்பூர் நேரம் : இரவு - 8 மணி   தமிழ் தலைவாஸ் - புனே நேரம் : இரவு 9 மணி

இடம் : தியாகராஜர் மைதானம், தில்லி சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி) (குறிப்பு : இனி சென்னையில் ஆட்டங்கள் கிடையாது)

டிக்கெட் பெற...  புக் மை ஷோ  (https://in.bookmyshow.com/explore/kabaddi) இணையதளம் மூலமாக டிக்கெட்டுகள் பெறலாம்.