games

img

இயான் மார்கன் உலகக்கோப்பை போட்டியிலிருந்து விலகதயார் ?

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை என்றால் டி20 உலகக்கோப்பை போட்டியிலிருந்து விலகத் தயாராக உள்ளதாக இயான் மார்கன் தெரிவித்துள்ளார்.  

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய இயான் மார்கன், மொத்தமாக 133 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அதேபோல இந்த ஆண்டு நடந்த ஏழு டி20 போட்டிகளில் வெறும் 82 ரன்களை மட்டுமே இங்கிலாந்து அணிக்காக எடுத்துள்ளார். இதனால், தற்போது டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக இருந்து வரும் இயான் மார்கனை உடனே பதவி விலக வேண்டும் என இங்கிலாந்து ரசிகர்கள் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள கேப்டன் இயான் மார்கன், அணிக்காகத் தான் பதவி விலகவும் தயார் என அதிரடியாக அறிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து அவர் கூறுகையில்,  நான் எப்போதும் கூறுவதுபோல், நான் அணியின் நிரந்தர வீரர் கிடையாது. இங்கிலாந்து அணியின் பாதையில் இடையூறாக இருக்க மாட்டேன். என்னுடைய பேட்டிங் பர்ம் மிகவும் மோசமாக இருக்கிறது. அதிக ரன்கள் குவிக்க முடியவில்லை என்பது எனக்குத் தெரியும். ஆனால், எனது கேப்டன்ஷிப் சிறப்பாக இருக்கிறது. அதில் எவ்வித குறையும் இருக்காது என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், ஒருவேளை என்னுடைய பேட்டிங் பார்ம் தொடர்ந்து மோசமாக அமைந்தால், நான் பிளேயிங் XI-ல் இருந்து வெளியேறுவேன். பௌலராகவோ, பீல்டராகவோ பங்களிப்பு செய்வதைவிட கேப்டன் பணியைதான் அதிகம் விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.