games

img

ஐபிஎல் 2022: பெங்களூரு - ராஜஸ்தான் அணிகளை இன்று பலப்பரீட்சை

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. 

முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 61 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தையும், அதற்கு அடுத்த ஆட்டத்தில் மும்பை அணியையும் தோற்கடித்தது.  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தன்னுடைய முதலாவது லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடம் தோல்வியடைந்தது. அடுத்த ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியைத் தோற்கடித்தது. 

இந்நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. இதில், ராஜஸ்தான் அணி ‘ஹாட்ரிக்’ வெற்றியை ருசிக்க அதிக ஆர்வம் காட்டும். அதேநேரத்தில் பெங்களூரு அணியும் தங்களது உத்வேகத்தை தொடர எல்லா வகையிலும் முயற்சி மேற்கொள்ளும். எனவே சமபலம் வாய்ந்த இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.