ஓய்வு அறிவித்தது இந்திய அணியின் தடுப்புச் சுவர
1996 முதல் 2012 வரை “கிரிக் கெட் உலகின் தடுப்புச் சுவர்” என்ற பிரம்மாண்ட பெரு மையுடன் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய அணியின் முன் னாள் தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் வலம் வந்தார். தற்பொ ழுதும் கூட டிராவிட் தான் கிரிக்கெட் உலகின் தடுப்புச் சுவர் ஆவார். அவருக்கு மாற்று யாரும் இல்லை. டிராவிட் 2012ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். வி.வி.எஸ்.லட்சுமணனும் டிராவிட் ஒய்வு பெற்ற அதே ஆண்டில் ஓய்வு பெற்றார். டிராவிட்டுக்குப் பின் அடுத்து யார் தடுப்பு அரணாக இந்திய அணியை பாதுகாப்பது? என்ற கேள்வி இந்திய ரசிகர்களிடையே பலமாக கிளம்பியது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் 2012ஆம் ஆண்டு முதல் புஜாரா இந்திய அணியின் மிடில் ஆர்டரில் கள மிறக்கப்பட்டார். வீரர்களின் காயம் உள்ளிட்ட காரணங்கள் டிராவிட் அணி யில் இருந்த பொழுதே 2010ஆம் ஆண்டு புஜாரா அணியில் சேர்க்கப்பட்டாலும், அப்போதைய காலகட்டத்தில் அவர் பெரியளவில் சோபிக்கவில்லை. கார ணம் உறுதியாக வாய்ப்பு வழங்க வில்லை. டிராவிட் ஓய்வு பெற்றதை உணர்ந்த புஜாரா 2012ஆம் ஆண்டு முதல் தனது கம்பீரமான ஆட்டத்தை தொடங்கினர். 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியூசிலாந்து அணிக்கெதிராக சதத்து டன் சாட்டையை சுழற்ற ஆரம்பித்த புஜாரா, அதே ஆண்டு நவம்பர் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக இரட்டை சதமடித்து பட்டையை கிளப்பி னார். இதன்பின்னர் புஜாராவின் தட்டுப் பாட்ட கலந்த நிதான ரன் குவிப்பு ஆட்டம் டெஸ்ட் உலகில் அனல் பறந்தது. அடுத்தடுத்து 2 இரட்டை சதம் என 19 சதங்கள் விளாசி அமர்க்களப் படுத்தினார். இதில் 35 அரை சதங் களும் அடங்கும். சோர்வடைந்த பந்துவீச்சாளர்கள் தனது அசத்தலான ஆட்டத்தின் காரணமாக குறுகிய காலத்தில் “குட்டி டிராவிட்” என்று புனைபெயர் பெற்ற புஜாரா களத்தில் இருக்கும் போது எதிரணி பந்துவீச்சாளர்களை எளிதில் சோர்வடையச் செய்தார். 155 கி.மீ., வேகத்தில் பந்து வீசினாலும் “மட்டை யும், கட்டையும் (ரன் குவிக்காமல் நகர்த்தப்படும் பந்து)” தான் கிடைக் கும் என்ற டிராவிட்டின் வழக்கத்தை மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் அமல் படுத்தினார். இதனால் புஜாரா களமிற ங்கினால் “அய்யோ இவரா” என ஆஸ்தி ரேலிய வீரர்கள் தலையில் அடித்துக் கொண்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது. புஜாரா கடைசியாக 2023ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கெதி ராக தொடரில் விளையாடினார். அதன் பின்னர் இளம் வீரர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கினார். அதற்காக அணியில் வாய்ப்பு வழங்க இல்லை, அதனால் கவுண்டி தொடரில் விளையாடினர் என் றெல்லாம் கூட முடியாது. இத்தகைய சூழலில் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக் கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக புஜாரா (37) ஞாயிறன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்திய அணியின் தடுப்புச் சுவரான டிராவிட்டுக்கு கிரிக்கெட் உலகில் வாழ்த்து குவிந்து வருகிறது.
சாதனைகள்
H இந்திய தேசிய அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 7,195 ரன்கள் குவிப்பு. சராசரி 43 ஆகும். H 3 இரட்டை சதங்கள் : 19 சதங்கள் : 35 அரை சதங்கள் H 278 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி மொத்தமாக 21,301 ரன்கள் குவித்துள்ளார். இதில் 66 சதமும், 81 அரை சதமும் அடங்கும். அதே போல சராசரி 51 என்ற அளவில் உள்ளது. H ஐபிஎல் தொடரில் பெங்களூரு, பஞ்சாப், சென்னை அணிக்காக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். சென்னை அணிக்காக அவர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை என்றாலும், ஆலோசனை வழங்கினார். ஐபிஎல் தொடரில் 22 இன்னிங்சில் 390 ரன்கள் குவித்துள்ளார். H சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 6 முறை ஆட்டநாயகன் விருதையும், 2 முறை தொடர் நாயகன் விருதையும் வென்றுள்ளார். குறிப்பாக இளையோர் 19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 2006ஆம் ஆண்டு தொடர் நாயகன் விருதையும் வென்றுள்ளார். H இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு இன்னிங்ஸில் 500 பந்துகளை எதிர்கொண்ட ஒரே வீரர் என்ற சாதனையும் புஜாராவிடம் மட்டுமே உள்ளது. கவாஸ்கர், சச்சின், டிராவிட் கூட இந்த சாதனையை படைத்ததில்லை. H தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற மண்ணில் அதிக டெஸ்ட் போட்டிகளில் வென்ற இந்திய வீரர் என்ற பெருமையும் புஜாராவிடம் உள்ளது. H ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரில் மட்டும் புஜாரா 1,258 பந்துகளை எதிர் கொண்டிருக்கின்றார். H மேலும் கடந்த 40 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் ஒரு டெஸ்ட் போட்டியில் 5 நாட்களிலும் பேட்டிங் செய்த வீரர் என்ற பெருமையை புஜாரா பெற்றிருக்கின்றார். இது வரலாற்று சாதனை ஆகும்.