பார்டர் கவாஸ்கர் தொடரின், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பாலோ ஆன்- ஐ தவிர்த்த நிலையில், போட்டி டிராவில் முடிய வாய்ப்புள்ளது.
இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் - கவாஸ்கர் தொடரின் 3ஆவது போட்டி பிரிஸ்பேனின் காபா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின், முதல் இன்னிங்ஸில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 445 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து விளையாடிய இந்திய அணி ஒரு கட்டத்தில் 74 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமாக இருந்தது. இந்நிலையில், கேஎல்.ராகுல் - ஜடேஜா இருவரும் இணைந்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
ஒரு சமயத்தில் இந்திய அணி பாலோ ஆன் ஆகிவிடும் என எதிர்பார்த்திருந்த நிலையில், அதை தடுத்து 10ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த துணைக் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா - ஆகாஷ் தீப் கூட்டணி 39 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர்.
இதனால், இந்த டெஸ்ட் சமனில் முடிய வாய்ப்பு உருவாகியுள்ளது. அப்படி இல்லாமல் இந்திய அணி பாலோ ஆன் ஆகியிருந்தால், மீண்டும் இந்திய அணி பேட்டிங் செய்து தோல்வியைத் தழுவவும் வாய்ப்பு உருவாகியிருக்கும்.