games

img

விளையாட்டு

ஆசிய அலைச்சறுக்கல் சாம்பியன்ஷிப்  வரலாறு படைத்த இந்திய வீரர்கள்

ஆசிய அலைச்சறுக்கல் சாம்பியன்ஷிப் போட்டி கள் சென்னை அருகே மகாபலிபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலை யில், 5ஆம் நாளான சனிக்கிழமை அன்று ஆடவர் ஓபன் பிரிவில் இந்திய வீரர்கள் ரமேஷ் புதிஹால், கிஷோர் குமார் ஆகிய இருவரும் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். ஆசிய அலைச்சறுக்கல் சாம்பி யன்ஷிப் வரலாற்றில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர்கள் என்ற பெருமையை ரமேஷ் புதிஹால், கிஷோர் குமார் ஆகிய இருவரும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்: இந்தியாவிற்கு வெண்கலம்

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடர் சீனாவின் செங்டு நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியாவின் ஆடவர், மகளிர் பிரிவுகள் சொதப்ப லான ஆட்டத்தை வெளிப்படுத்திதொடர் தோல்விகளுடன் வெளியே றின. எனினும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அசத்தலாக விளையாடிய இந்திய வீரர் ரிஷப் யாதவ் வெண்கலம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.  தரவரிசையில் 10ஆவது இடத்தில் உள்ள ரிஷப் யாதவ் இந்தியா வின் மூத்த வீரரும், பல உலகக்கோப்பை தொடர்களில் தங்கப்பதக்க வெற்றியாளருமான அபிஷேக் வர்மாவை 149-147 என்ற கணக்கில் வீழ்த்தி ரிஷப் யாதவ் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

அம்பானிக்குச் சொந்தமான ஜியோ ஸ்டாரின்  துறை தலைவர் ஐசிசி தலைமை செயல் அதிகாரியாக நியமனம்

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) என்ற ஓடிடி “ஸ்டார் இந்தியா”வின் துணை நிறுவனமான நோவி டிஜிட்டல் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும். 2024ஆம் ஆண்டு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் பெரும்பாலான பங்குகளை பிரதமர் மோடிக்கு நெருக்கமான தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் வாங்கியது. தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜியோ ஹாட்ஸ்டாராக மாறியுள்ளது. அதாவது ஜியோ ஹாட்ஸ்டார் அம்பானியின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில், இந்த ஜியோ ஹாட் ஸ்டாரின் ஸ்போர்ட்ஸ் துறை தலைவராக இருந்த சஞ்சோகுப் குப்தா சமீபத்தில் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இத்தகைய சூழலில் சஞ்சோகுப் குப்தா சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC) தலைமை செயல் அதிகாரியாக (CEO) நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக இஷான் சட்டர்ஜி ஜியோ ஸ்டாரின் ஸ்போர்ட்ஸ் துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச அளவில் கல்லா கட்ட திட்டம்? ஐசிசி தலைவராக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மகன் ஜெய் ஷா உள்ளார். பாஜகவிற்கு நெருக்கமான அம்பானி குழும துறை தலைவர் ஐசிசி தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுளார். ஜெய் ஷாவின் உத்தரவின் பேரில் இந்த நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளதா? இல்லை, சர்வதேச அளவில் அம்பானிக்கு கல்லா கட்ட பாஜக திட்டமிட்டு சஞ்சோகுப் குப்தாவை அனுப்பி வைத்துள்ளதா? என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.