உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இந்திய வீராங்கனை தன்விக்கு வெள்ளிப்பதக்கம்
உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்று வந்தது. திங்கள்கிழமை அன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் தன்வி ஷர்மா (16 வயது - பஞ்சாப்), தாய்லாந்தின் அனயாபட் பிரீசாசக்கை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் வெற்றிக்காக கடுமையாக போராடிய தன்வி ஷர்மா 7-15, 12-15 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியை தழுவினார். அனயாபட் தங்கப்பதக்கம் வென்ற நிலையில், தன்வி ஷர்மா வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். உலக ஜூனியர் பேட்மிண்டனில் 17 ஆண்டுக்கு பிறகு பதக்கத்தை ருசித்த இந்திய வீராங்கனை என்ற சிறப்பை தன்வி பெற்றார். இதற்கு முன்பு அபர்ணா 1996ஆம் ஆண்டில் வெள்ளிப் பதக்கத்தையும், சாய்னா நேவால் 2006ஆம் ஆண்டில் வெள்ளி, 2008ஆம் ஆண்டில் தங்கப் பதக்கம் வென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
176 கி.மீ., வேகத்தில் பந்துவீச முடியுமா?
3 ஒருநாள், 5 டி-20 போட்டி களைக் கொண்ட தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ளது. இந்த சுற்றுப் பயணத்தின் தொடக்க நிகழ்வான ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஞாயிறன்று பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் சீனியர் வீரர் ரோகித் சர்மாவிற்கு எதிராக ஆஸ்தி ரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் மணிக்கு 176.5 கி.மீ., வேகத்தில் பந்துவீசியதாக கணக்கிடும் கருவி காட்டியது. இதனால் கிரிக்கெட் வர லாற்றில் அதிவேகத்தில் பந்துவீசிய சோயப் அக்தரின் (பாகிஸ்தான் - 161.3 கி.மீ.,) சாதனையை ஸ்டார்க் முறியடித்து விட்டதாக சமூகவலை தளங்களில் செய்திகள் மீம்ஸ்கள் வைரலானது. இத்தகைய சூழலில், வேகத்தை கணக்கிடும் கருவியில் ஏற்பட்ட பிழையால் ஸ்டார்க் வீசிய பந்தின் வேகத்தை அதிகரித்து காட்டி விட்டதாக சர்வதேச கிரிக்கெட் வாரி யம் (ஐசிசி) விளக்கம் அளித்துள் ளது. இதனால் கிரிக்கெட்டில் அக்தர் வீசிய 161.3 கி.மீ. வேகமே, கிரிக்கெட் உலகின் அதிவேக பந்துவீச்சாக தொடர்கிறது. முடியாது பந்துவீசும் விதிமுறைகளின் படி 165 கி.மீ., வேகத்தில் கூட பந்து வீசுவது மிக சிரமமான காரியம் தான். கையின் மணிக்கட்டை சுழற்றுவதில் விதிமுறைகள் கடுமையாக இருப்ப தால் பந்தை போதுமான அளவில் எறிய முடியாது. அதனால் 176 கி.மீ., வேகத்தில் பந்து வீசுவது இயலாத காரியம் தான். வாய்ப்பும் கிடையாது.
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் : இன்றைய ஆட்டம்
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடம் : இந்தூர், ம.பி., நேரம் : மதியம் 3:00 மணி சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)