games

img

விளையாட்டு செய்திகள்

கான்பூர் டெஸ்ட் போட்டியிலும் அபார வெற்றி தொடரைக் கைப்பற்றியது இந்தியா

டெஸ்ட், ஒருநாள் என இரண்டு  விதமான போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்க இந்தியா விற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்க தேச அணி,  சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட்  தொடரில் விளையாடியது. தமிழ்நாடு தலைநகர் சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது டெஸ்ட் போட்டி உத்தரப்பிர தேச மாநிலம் கான்பூரில் நடைபெற்றது கனமழையால் இந்த டெஸ்ட் போட்டி யின் 2 மற்றும் 3ஆம் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், 4ஆம் நாள் ஆட்டத்தில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 233 ரன்களுக்கு ஆட்ட மிழந்தது. அதே நாளில் 9 விக்கெட் இழப் பிற்கு 285 ரன்கள் எடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸை டிக்ளர் செய்தது. 52 ரன்கள் பின்னிலையுடன் இரண் டாவது இன்னிங்ஸை தொடங்கிய வங்க தேச அணி பும்ரா (3 விக்கெட்டுகள்), அஸ்வின் (3 விக்கெட்டுகள்), ஜடேஜா (3  விக்கெட்டுகள்) ஆகியோரின் அசத்த லான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடி யாமல் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்து, இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 95 ரன்கள் நிர்ணயம் செய்தது. 95 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஜெய்ஸ்வால் (51), விராட் கோலி (29) ஆகியோரின் சிறப் பான ஆட்டத்தால் 17.2 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்து  அபார வெற்றி பெற்று, டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பையை வென்றது இந்தியா. ஆட்டநாயகனாக ஜெய்ஸ்வாலும், தொடர்நாயகனாக அஸ்வினும் (இரு வரும் இந்தியர்கள்) தேர்வு செய்யப் பட்டனர். 

பயிற்சியாளராக களமிறங்கிய அதிரடி வீரர் ஜெயசூர்யா
சூப்பர் பார்முக்கு திரும்பிய இலங்கை அணி

1981 முதல் 2011 வரை சுமார் 30 ஆண்டுகளாக கிரிக்கெட் உல கில் “சனத் ஜெயசூர்யா” என்ற பெயரை கேட்டாலே மற்ற நாடு களின் வீரர்களுக்கு பயம் கலந்த தயக்கம் இருக்கும். அது பந்துவீச்சாளராக இருந் தாலும் சரி, பேட்டராக இருந்தா லும் சரி ஜெயசூர்யாவை எதிர் கொள்ளும் நபர்கள் அவரை வெறித்து பார்த்த படி தான்  தங்களது வேலையை துவங்குவார்கள். அந்தளவுக்கு தனது அசத்தலான அதிரடி ஆல்ரவுண்டர் ஆட்டத்தால்  ஜெய சூர்யா கிரிக்கெட் உலகை நடுங்க வைத்தவர். தொடக்க வீர ராக களமிறங்கும் வீரராக யார் என்றெல்லாம் பார்க்கமாட்டார்; தனது அதிரடி மூலம் ருத்ரதாண்டவம் ஆடிவிடுவார்.  இந்திய அணியின் சேவாக்கை போல பயமின்றி அதிரடி யாக பேட்டிங் செய்யும் ஜெயசூர்யா “எனக்கு பயம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது” என்பதை கிரிக்கெட் உலகு மூலம் சொல்ல வைத்தவர். 17 பந்துகளில் அரை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை நீண்ட நாள் தன் கைவசம் வைத்து இருந்த ஜெயசூர்யா பேட்டிங் மட்டுமின்றி சுழற் பந்து வீச்சிலும் அசத்தலாக செயல்படக்கூடியவர். ஜெய சூர்யா தற்போது இலங்கை அணியின் இடைக்கால பயிற்சியாளராக நிய மிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது அபார பயிற்சியின் கீழ் இலங்கை அணியின் 3  ஆண்டுகால மோசமான பார்ம்  முடிவுக்கு வந்தது. தொடர் தோல்வி மற்றும் மோசமான ஆட்டத்திறனால் திணறிய இலங்கை அணி இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி களில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி மிரட்டி யுள்ளது. இதில் சூப்பர் பார்மில் உள்ள நியூசிலாந்து அணி யை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றி கலக்கியுள்ளது. இலங்கை அணியின் இத்தகைய செயல்பாட்டிற்கு எல்லாம் ஜெயசூர்யா தான் காரணம் ஆவார். தற்போது இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜெய சூர்யா, நிரந்தர பயிற்சியாளராக நியமிக்கப்பட்டால் 1996இல் ஒருநாள் உலகக்கோப்பை வென்றது போல, வரும் காலங்களில் இலங்கை அணி 2027இல் மீண்டும் உலகக் கோப்பையை வெல்லலாம் என கணிப்புகள் வெளியாகியுள்ளது.