கே.எல்.ராகுல், ஜடேஜா அபாரம் பாலோ ஆன் தவிர்த்த இந்தியா
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதி வரும் பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் மூன்றா வது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியா வின் பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் நடைபெற்று வரு கிறது.
முதலில் களமிறங்கிய ஆஸ்தி ரேலிய அணி டிராவிஸ் ஹெட் (152), ஸ்மித் (101) ஆகியோரின் அசத்தலான சதத்தின் உதவியால் முதல் இன்னிங் சில் 445 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
கே.எல்.ராகுல் அசத்தல்
தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 2ஆவது டெஸ்டைப் போல ஆஸ்திரேலிய அணியின் வேகத்தில் திணறியது. ஜெய்ஸ்வால் (4), கில் (1), கோலி (3), பண்ட் (9), ரோகித் (10) ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் அடுத்த டுத்து ஆட்டமிழந்தனர். மறுபுறம் கே.எல்.ராகுல் ஆஸ்திரேலிய அணி யின் பந்துவீச்சை திடமாக கணித்து நிதான வேகத்தில் ரன் சேர்த்தார். கே.எல்.ராகுலின் உதவியால் இந்தியா 100 ரன்களை கடந்தது. இல்லை என்றால் இந்திய அணியின் நிலைமை மோசமாகியிருக்கும். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கே.எல்.ராகுல் லயன் பந்துவீச்சில் 84 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஜடேஜா கலக்கல்
அதன்பிறகு நிதிஷ் (16), முகமது சிராஜ் (1) ஆகியோர் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க, விக்கெட் சரிவை மற்றும் பாலோ ஆன் தவிர்க்க ஆல்ரவுண்டர் ஜடேஜா இறுதிக்கட்டத்தில் கடுமை யாக போராடினார். அரை சதமடித்த ஜடேஜா (77) கம்மின்ஸ் பந்துவீச்சில் எதிர்பாராவிதமாக ஆட்டமிழந்தார். அதன்பிறகு மழை காரணமாகவும், போதிய வெளிச்சமின்மை காரணமாக வும் 4ஆம் நாள் ஆட்டம் முன்கூட்டியே நிறைவு பெற்றது.
4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 74.5 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்து இருந்தது. ஆகாஷ் (27), பும்ரா (10) ஆகியோர் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிக பட்சமாக கம்மின்ஸ் 4 விக்கெட்டு களை வீழ்த்தினார். 193 ரன்கள் பின்னி லையுடன் கடினமாக போராடி இந்திய அணி பாலோ ஆன் தவிர்த்த நிலையில், புதன்கிழமை அதிகாலை 5:30 மணிக்கு கடைசி நாள் ஆட்டம் தொடங்குகிறது.
இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில், ஆட்டத்தின் தன்மையை உற்றுநோக்கினால் பிரிஸ்பேன் டெஸ்ட் டிராவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குகேஷிடம் ரூ.4.6 கோடி வரியாக பறித்த மோடி அரசு ரூ.11.45 கோடி பரிசுத்தொகையில் ரூ.6.4 கோடி மட்டுமே
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற தமிழ்நாடு வீரர் குகேஷிற்கு ரூ.11.45 கோடி பரிசாக வழங்கப்பட்டது. ஆனால் 42% வரிப்பிடித்தம் காரணமாக குகேஷிற்கு வெறும் ரூ.6.4 கோடி மட்டுமே பரிசுத்தொகை கிடைக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. நாட்டில் வரிகள் அதிகளவில் உள்ள நிலையில், வருமான வரி கீழ் ரூ.3.26 கோடியும், கூடுதல் கட்டணமாக ரூ.1.21 கோடியும். சுகாதாரம், கல்வி சிசிஇ வரியாக ரூ.17.96 லட்சம் என மொத்தமாக குகேஷிடம் 4.67 கோடி ரூபாய் வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதில், மொத்த பரிசுத்தொகையில் 42% ஆகும். என்னங்க சார் உங்க சட்டம்? என மோடி அரசை சமூகவலைதளங்களில் ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
நான் வேண்டும் என்றே தோற்கவில்லை : டிங் லிரென் மறுப்பு
உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் கடைசி சுற்று ஆட்டத்தில் தமிழ்நாட்டின் குகேஷ், சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி உலக சாம்பியன் பட்டத்தை வென்றார். கடைசி சுற்று ஆட்டத்தில் டிங் லிரென் 55ஆவது நகர்வில் தவறு செய்தார். இந்த தவறு அவரது தரத்திலான வீரருக்கு மிகவும் வேடிக்கையானது என ரஷ்ய செஸ் கூட்டமைப்பின் தலைவர் ஆண்ட்ரே பிலடோவ் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இந்நிலையில், ஆண்ட்ரே பிலடோவின் குற்றச்சாட்டுக்கு டிங் லிரென் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,”நான் வேண்டும் என்றே தோற்கவில்லை. உலக செஸ் சாம்பியன்ஷிப் 14ஆவது சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி யும் குகேஷிடம் தோல்வியை தழுவினேன். வேண்டுமென்றே தவறு செய்து தோற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது” என முன்னாள் சாம்பியன் டிங் லிரென் கூறியுள்ளார்.