games

img

ஓய்வை அறிவித்தார் கிரிக்கெட் வீரர் அஸ்வின்!

புதுதில்லி,டிசம்பர்.18- பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் திடீரென ஓய்வை அறிவித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
38 வயதான அஸ்வின் இதுவரை 106 போட்டிகளில் விளையாடி, 537 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இவர் இந்திய அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளராகவும், சிறப்பாக பேட்டிங் செய்பவராகவும் விளங்கியுள்ளார்.
தனது ஓய்வைப்பற்றி அவர் குற்ப்பிடும்போது செய்தியாளர்களிடம் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இதுதான் எனது கடைசி நாள். ஒரு கிரிக்கெட்டராக எனக்குள் இன்னும் திறமை இருப்பதாகவே உணர்கிறேன். ஆனாலும், கிளப் அளவிலான கிரிக்கெட்டில் அதைக் காட்ட விரும்புகிறேன். சர்வதேச கிரிக்கெட்டில் இன்றுதான் எனது கடைசி நாள்," என காபா டெஸ்டை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அஸ்வின் தெரிவித்தார்.