games

img

விளையாட்டு

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் கட்டாய வெற்றி நெருக்கடியில் இந்தியா

13ஆவது சீசன் மகளிர் உல கக்கோப்பை கிரிக்கெட் இந்தியா மற்றும் இலங்கை நாடு களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வியாழக் கிழமை அன்று நடைபெறும் 24ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூசி லாந்து  அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் மிக முக்கியமானது ஆகும். உலகக்கோப்பை தொடரில் ஒவ் வொரு அணிகளும் 7 லீக் ஆட்டங் களில் விளையாட வேண்டும். 23ஆவது லீக் ஆட்டம் வரை ஆஸ்தி ரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பி ரிக்கா ஆகிய மூன்று அணிகள் அரை யிறுதி சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது. தற்போது நான்கா வது இடத்திற்கான போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணி கள் மல்லுக்கட்டி வருகின்றன.  இதுவரை இரு அணிகளும் தலா 5 போட்டிகளில் விளையாடி 4 புள்ளி களுடன் சரிசம அளவில் உள்ளன.   இந்தியாவின் ரன் ரேட் 0.52 என்ற அள விலும், நியூசிலாந்து அணி ரன் ரேட் மைனஸ் 0.24 என்ற அளவிலும் உள்ளது.  இந்தியா இன்னும் நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் விளை யாட வேண்டும். இந்த  இரண்டு போட்டி களிலும் இந்தியா வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு நேரடியாக தகுதி பெற்று விடும். ஒருவேளை நியூசி லாந்திடம் தோல்வி அடையும் இந்தியா, வங்கதேசத்துக்கு எதிராக வெற்றி பெறும் பட்சத்தில் நியூசிலாந்து  அணி கடைசியாக இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் ஆட்டத்தில் தோல்வியை தழுவ வேண்டும். இப்படி நடந்தால் இந்தியா அரை யிறுதிக்கு தகுதி பெற்று விடலாம். ஒருவேளை நியூசிலாந்துக்கு எதி ராக இந்தியா வெற்றி பெற்று வங்க தேசத்துக்கு எதிராக தோல்வியை தழு வினால், நியூசிலாந்து -  இங்கிலாந்து  ஆட்டத்தின் வெற்றி - தோல்வி  மற்றும்  ரன் ரேட்டையும் எதிர்பார்க்க வேண்டிய சூழல் இந்தியாவிற்கு ஏற்படும்.  இந்தியா இரண்டு லீக் ஆட்டங்களி லும் தோல்வியை தழுவினால் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு சென்று விடும். இதனால் கட்டாய வெற்றியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றாலே அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகும். இடியாப்ப சிக்கலில் சிக்கி தவிக்க வேண்டிய அவசியமும் இல்லை.

இந்தியா - நியூசிலாந்து

நேரம் : மதியம் 3 : 00 மணி  இடம் : நவி மும்பை, மகாராஷ்டிரா சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)

பயிற்சியாளர்களின் மோதல் போக்கு  தான் டிரெண்டிங்

குறுகிய காலத்தில் பிரபலமடைந்த புரோ கபடி தொடரின் நடப்பாண்டுக்கான சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் வீரர்களின் திறமைகளை  விட பயிற்சியாளர்களின் செயல்பாடு, சண்டை சச்சரவுகளுடன் ஏற்படும் மோதல் விவகாரங்களே பிரபலமாக மாறி டிரெண்டிங் ஆகி வருகிறது.  இந்த பயிற்சியாளர்களின் மோதலுக்கு முதன்மையான காரணம் ஹரியானா அணியின் பயிற்சியாளர் மன்பிரீத் தான்.  அவர் தான் ஒவ்வொரு போட்டியிலும் மற்ற அணிகளின் பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்களுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். இதுவரை தில்லி, பாட்னா,  ஜெய்ப்பூர், மும்பை ஆகிய அணிகளின் பயிற்சியாளர்கள் உடன்  மன்பிரீத் கடும் வாக்கு வாதத்துடன் மோதியுள்ளார். மேலும் மற்ற அணிகளின் பயிற்சியாளர்களுடன் மன்பிரீத் மோதினாலும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதனால் 11 அணிகளிடமும் மன்பிரீத்தின் மோதல் எடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பதிலடி கொடுக்குமா இந்தியா : இன்று 2ஆவது ஒருநாள் போட்டி

3 ஒருநாள், 5 டி-20 போட்டி களில் பங்கேற்க இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி  ஆஸ்தி ரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் (பெர்த்) ஆஸ்தி ரேலியா அணி அபார வெற்றி பெற்றது.  இந்நிலையில், 2ஆவது  ஒருநாள் போட்டி அடிலெய்டு மைதானத்தில்  வியாழக்கிழமை  அன்று நடைபெறுகிறது. தொட ரை கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலியா அணியும், பதிலடி கொடுத்து கடைசி ஒருநாள் போட்டி யிலும் வெற்றியை ருசித்து தொடரை கைப்பற்றும் பாதையில் பய ணிக்கும் முனைப்பில் இந்திய அணியும் என இரு அணிகளும் வெற்றியின் மீது குறியாக கள மிறங்குவதால் இந்த ஆட்டம் பர பரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா  

இடம் : அடிலெய்டு, ஆஸ்திரேலியா நேரம் : காலை 9:00 மணி சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)