முதலிடத்தில் இந்தியாவின் ஸ்ரீஜா சேஷாத்ரி
ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் அய்ன் நகரில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற மகளிர் பிரிவு 7ஆவது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீஜா சேஷாத்ரி - மற்றொரு இந்திய வீராங்கனை வந்திகா அகர்வாலை எதிர்கொண்டார். 25:18 நிமிடம் நடைபெற்ற இந்த ஆட்டம் டிராவில் நிறுவடைந்தது. இதன்மூலம் ஸ்ரீஜா சேஷாத்ரி 6 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு (மங்கோலிய வீராங்கனை முங்குன்சுல் உடன்) முன்னேறினார். அதே போல வந்திகா அகர்வால் 5.5 புள்ளிகளுடன் 5ஆவது இடத்தில் நீடிக்கிறார்.