இங்கிலாந்தை வீழ்த்தியஇந்தியாவின் கிருஷ்ணா முகமது சமூக வலைதளங்களில் வைரலாகும் மத நல்லிணக்கம்
5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண் டது. இந்த தொடரின் கடைசி போட்டி யில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. குறிப்பாக திங்கள்கிழமை அன்று பரபரப் பாக நடைபெற்ற 5ஆவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது சிராஜ் (5 விக்கெட்டுகள்), பிரஷீத் கிருஷ்ணா (4 விக்கெட்டுகள்) சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர். அதாவது முகமது சிராஜ் - பிரஷீத் கிருஷ்ணாவின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா தொடரை இழக்காமல் தப்பியது. இத்தகைய சூழலில், பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு நாட்டில் வகுப்புவாதம் (இந்து - முஸ்லிம் இடையே) தலை தூக்கியுள்ள நிலையில், இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியால் மதநல்லிணக் கம் மலர்ந்துள்ளது. அதாவது இங்கி லாந்தை வீழ்த்திய “இந்தியாவின் கிருஷ்ணா, முகமது” என்ற கருத்து மூலம் மதநல்லிணக்க கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி யுள்ளது.
ரொனால்டோ தான் ரோல்மாடல் : முகமது சிராஜ்
இங்கிலாந்துக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற காரணமாக இருந்த, முகமது சிராஜ் தனது வெற்றிக்கான ரகசியத்துக்கு காரணம் கிறிஸ்டியானோ ரொனால்டோ எனக் கூறியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறுகையில்,”நான் பொதுவாக காலை 8 மணிக்குத்தான் எழுந்திருப்பேன். ஆனால், இன்று (போட்டி நடைபெற்ற நாள்) 6 மணிக் கெல்லாம் விழித்து விட்டேன். இன்றைக்கு எப்படியாவது வெற்றிபெற வேண்டும், நான் அதை முடிக்க வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். காலையில் கூகுள் செய்து அந்த இமேஜைப் பார்த்தேன். அதாவது ரொனால்டோ படம் அதற்கு மேலே ‘BELIEVE (நம்பு)’ எனும் வாசகம் அந்த வால்பேப்ப ரை நான் டவுன்லோடு செய்தேன். ஆகவே நம்பிக்கையே முக்கியம். அதுவே என் தாரக மந்திரம்” எனக் கூறினார். சிராஜ் தீவிரமான ரொனால்டோ ரசிகர். விக்கெட் எடுத்த பிறகு ரொனால்டோ பாணியில் (சுயூ..) கொண்டாடுவதும் குறிப்பிடத்தக்கது.
தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : ஆகஸ்ட் 7 முதல் நொய்டாவில் நடைபெறுகிறது
ஆகஸ்ட் 7 முதல் உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் சப்-ஜூனியர் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதுதொடர்பாக “பாக்ஸிங் பெடரேஷன் ஆப் இந்தியா (BFI)” செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட்ட அறிவிப்பில்,”ஆகஸ்ட் 7 முதல் 13ஆம் தேதி வரை கிரேட்டர் நொய்டாவில் நடைபெறவுள்ள சப்-ஜூனியர் (U-15) தேசிய பாக்ஸிங் சாம்பியன்ஷிப்பில் 400 சிறுவர்கள், 300 சிறுமிகள் உள்ளிட்ட 700க்கும் மேற்பட்ட குத்துச்சண்டை வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்” என அதில் கூறப்பட்டுள்ளது.