ஐபிஎல் போட்டியைப் போன்று வில்வித்தை லீக்
இந்தியாவில் ஐபிஎல் போட்டியைப் போன்று வில்வித்தை லீக் தொடரையும் நடத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக இந்திய வில்வித்தை சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”புதிதாக நடத்தப்பட உள்ள வில்வித்தை லீக் தொடரின் தொடக்கப் போட்டிகள் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தில்லியில் உள்ள யமுனா விளையாட்டு வளாகத்தில் தொடங்குகிறது. இந்த தொடர் 11 நாட்கள் நடைபெற உள்ளது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன. உலகின் டாப் 10 வீராங்கனைகள், இந்திய நட்சத்திரங்களுடன் கலந்து கொள்வார்கள். இந்த வில்வித்தை லீக் தொட ருக்கு உலக வில்வித்தை சம்மேளனம், ஆசிய வில்வித்தை சம்மேள னம் மற்றும் ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் ஆகியவை ஆதரவு அளித்துள்ளன” என அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடத்தியது தவறா? உரிமையாளர் ஹர்ஷித் தோமர் சரமாரி கேள்வி
இங்கிலாந்து நாட்டில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்ற உலக சாம்பியன்ஷிப் ஆப் லெஜெண்ட்ஸ் (WCL) தொடரில், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி மற்றும் அரையிறுதிப் போட்டி திடீரென ரத்து செய்யப்பட்டது. இதில் இந்தியா சாம்பியன்ஸ் அணியின் கேப்டன் யுவராஜ் சிங்கை நோக்கி ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளால் தான் தொடர் ரத்து செய்யப்பட்டதாக அந்த தொடரின் உரிமையாளர் ஹர்ஷித் தோமர் கூறிஇருக்கிறார். இதுதொடர்பாக ஹர்ஷித் தோமர் கூறுகையில்,”இந்தத் தொடருக்கான திட்டமிடல் 8-10 மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. போட்டி அட்டவணை 2024 டிசம்பரி லேயே வெளியிடப்பட்டது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரி யத்திடம் (ECB) இரு நாடுகளின் புவிசார், அரசியல் சூழல் குறித்து நீண்ட நேரம் விவாதித்தோம். அதன் பிறகே அவர்கள் போட்டியை நடத்த அனுமதி அளித்தார்கள். பஹல்காம் சம்பவம் மிகுந்த வருத்தத்தை அளித்தது. போட்டி நெருங்க நெருங்க, இந்தியா-பாகிஸ்தான் மோதலின் எதார்த்தத்தை மக்கள் உணரத் தொடங்கினர். சமூக வலைதளங்களில் எங்களுக்கு எதிராகக் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்திய ரசிகர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வதில் நாங்கள் தவறிவிட்டோம். இந்தச் சூழலில் இந்தப் போட்டியைத் திட்டமிட்டது முதிர்ச்சியற்ற செயல் என்பதை ஒப்புக்கொள்கிறேன். பாகிஸ்தான் உடனான போட்டியைப் புறக்கணிப்பது என்பது சில வீரர்களின் முடிவு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய அணியின் நிலைப்பாடு. அதே சமயம் விரைவில் மகளிர் உலகக் கோப்பை நடைபெற உள்ளது. அதில் இந்தி யாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. ஆசியக் கோப்பை யிலும் இரு அணிகளும் விளையாட உள்ளன. அப்படி இருக்கும்போது, நாங்கள் மட்டும் இந்த லெஜெண்ட்ஸ் போட்டியை நடத்த விரும்பியதில் என்ன தவறு இருக்கிறது? கடைசி நிமிடத்தில் எதையும் மாற்றுவது இயலாத காரியமாக இருந்தது” என அவர் கூறினார்.
டிரெண்டிங் வாய்ஸ்... இந்திய வீரர் சிராஜ் நல்ல மனிதர் ; இங்கிலாந்து வீரர் புகழாரம்
சிராஜ் ஒரு சிறந்த வீரர், ஒரு உண்மையான மாவீரன். அவரைப் போன்ற ஒரு வீரர் அணியில் இருக்க வேண்டும் என்றுதான் அனைவரும் விரும்புவார்கள். அவரிடம் சில நேரங்களில் ஒரு போலியான கோபம் இருக்கும், அதை நான் எளிதாகக் கண்டு பிடித்துவிடுவேன். உண்மையில் அவர் ஒரு நல்ல மனிதர் என்பது எனக்குத் தெரியும். சிராஜ் தனது அணிக்காக தனது முழு உழைப்பை யும் கொடுக்கிறார். களத்தில் அவர் கடுமையாக உழைக்கிறார். அத னால்தான் அவரால் விக்கெட்டுகளை வீழ்த்த முடிகிறது. அவரது உழைப்பும், திறமையும் தான் அவரது வெற்றிக்குக் காரணம்.
- இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்